Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களின் வீதியில் இறங்கிய இளைஞர்கள்!| Germany Gen Z Protest: Young People Take to the Streets in 34 Cities

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2026
in அரசியல் செய்திகள்
0
ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களின் வீதியில் இறங்கிய இளைஞர்கள்!| Germany Gen Z Protest: Young People Take to the Streets in 34 Cities
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜெர்மனியில் கல்வி மற்றும் பொதுச் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்க வலியுறுத்தியும், கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். “Gen Z regelt’ என்ற அமைப்பின் சார்பில் நேற்று நாட்டின் 34 நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, ஃபிராங்க்பர்ட் உள்ளிட்ட இடங்களில் இரவில் கடைகள் சூறையாடப்பட்டு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.

கல்வி முதல் ராணுவ சேவை வரை… கோரிக்கைகள் என்ன?

கல்வி உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, பொதுச் சேவைகளைப் பாதுகாப்பது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகியவையே போராட்டக்காரர்களின் முதன்மை கோரிக்கைகளாக இருக்கின்றன. இதனுடன், கட்டாய ராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதற்கு இளைஞர்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

ஜெர்மனியில் Gen Z போராட்டம்

ஜெர்மனியில் Gen Z போராட்டம்
Boris Roessler

‘Gen Z regelt’ அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டங்கள், சமூக ஊடகப் பிரசாரங்கள் மூலமே பெருமளவில் முன்னெடுக்கப்பட்டன. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஃபிராங்க்பர்ட்டில் வன்முறை…

கொளுந்துவிட்டு எறிந்த போராட்டம்!

பகலில் அமைதியான முறையில் நடைபெற்ற பேரணிகள், மாலைக்குப் பிறகு வன்முறையாக உருவெடுத்தன. ஃபிராங்க்பர்ட்டின் முக்கிய வணிகப் பகுதியான ‘ஸெய்ல்’ (Zeil) பகுதியில் கடைகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டு, சூறையாடப்பட்டன. காவல்துறையினர் மீது பட்டாசுகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறையினர் பொதுமக்களை வெளியேற்றினர்.

ஜெர்மனியில் Gen Z போராட்டம்

ஜெர்மனியில் Gen Z போராட்டம்

இதேபோல ஹாம்பர்க் நகரில் சாலைத் தடுப்புகளுக்குத் தீ வைக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்களைக் கலைக்கக் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களைப் பயன்படுத்தினர். கொலோன், ஸ்டுட்கார்ட், பெர்லின் உள்ளிட்ட நகரங்களிலும் மோதல் சம்பவங்கள் பதிவாகின. இதில் பல காவல்துறையினர் காயமடைந்தனர்.

அமைப்பாளர்களின் விளக்கம்

போராட்டங்களை ஒருங்கிணைத்த அமைப்பு, வன்முறைச் சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. அதிகாரபூர்வப் போராட்டங்கள் முடிவடைந்த பின்னரே இந்த வன்முறைகள் நடந்துள்ளதால், தங்களது நியாயமான கோரிக்கைகளிலிருந்து வன்முறையைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜெர்மனியில் Gen Z போராட்டம்

ஜெர்மனியில் Gen Z போராட்டம்
Boris Roessler

அதேவேளையில், தெளிவற்ற தலைமை மற்றும் ஒருங்கிணைப்பு முறையைக் காரணம் காட்டி, ஜெர்மனியின் தேசிய மாணவர் அமைப்பான ‘Bundesschülerkonferenz’ இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டது.

இளைஞர்களின் சமூக மற்றும் பொருளாதாரக் கோரிக்கைகளை அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பதும், வன்முறையைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுமே ஜெர்மனியின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும்.



.

Previous Post

“சதி… முறைகேடு… தொடர் நிதியிழப்பு…” – சீர்குலைக்கப்படுகிறதா வட ஆற்காடு வன்னியர் சங்கம்? | is the north arcot district vanniya kula kshatriya sangam being undermined?

Next Post

‘Never Ending’ சொகுசுக் கப்பல் பயணம் பாதியில் முடிவு; இறக்கிவிடப்பட்ட 200 பயணிகள்! – காரணம் என்ன?| Villa Vie Odyssey Cruise Halted in Cambodia as Fuel Costs Soar

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘Never Ending’ சொகுசுக் கப்பல் பயணம் பாதியில் முடிவு; இறக்கிவிடப்பட்ட 200 பயணிகள்! – காரணம் என்ன?| Villa Vie Odyssey Cruise Halted in Cambodia as Fuel Costs Soar

'Never Ending' சொகுசுக் கப்பல் பயணம் பாதியில் முடிவு; இறக்கிவிடப்பட்ட 200 பயணிகள்! - காரணம் என்ன?| Villa Vie Odyssey Cruise Halted in Cambodia as Fuel Costs Soar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In