Monday, November 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜவுளிக் கடை ட்ரையல் ரூமில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. டெல்லியில் பகீர் சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2026
in அரசியல் செய்திகள்
0
ஜவுளிக் கடை ட்ரையல் ரூமில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. டெல்லியில் பகீர் சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 16, 2026 4:00 PM IST

டெல்லியில், ஜவுளிக் கடையின் ட்ரையல் ரூமுக்குள் 18 வயது இளம்பெண்ணைக் கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம்பெண் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?.

ஷப்னம்
ஷப்னம்

மேற்கு டெல்லியில் உள்ள மோதி நகர் பகுதியில், மெட்ரோ ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக் கடையில், ஷப்னம் என்ற 18 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்தார். தனது குடும்பத்துடன் மேற்கு டெல்லியில் வசித்து வந்த ஷப்னம் குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் சென்று வந்ததார். சம்பவத்தன்று வழக்கம்போல் ஜவுளிக் கடைக்குச் சென்றுள்ளார். சனிக்கிழமை மாலை, ஷப்னமின் வேலை நேரம் முடியவிருந்த நிலையில், அவருக்குத் தெரிந்த சூரஜ் என்ற இளைஞர் கடைக்கு வந்துள்ளார். அப்போது ஷப்னமிடம் பேச வேண்டும் எனக் கூறி, அவரை கடையின் உடை மாற்றும் அறையான ட்ரையல் ரூமுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அங்கு சென்ற சில நிமிடங்களில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்த நிலையில், ஆத்திரம் தலைக்கேறிய சூரஜ், தான் கொண்டு வந்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஷப்னமின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. கடைக்குள் நுழையும் சூரஜ், அங்கிருந்த ஷப்னமிடம் தகராறில் ஈடுபடுவதும், அவரைத் தாக்கி ட்ரையல் ரூம் நோக்கி இழுத்துச் சென்று தாக்குதல் நடத்துவதும் காட்சிகளில் பதிவாகியுள்ளன. சத்தமில்லாமல் கொலையை செய்து விட்ட, நைஸாக கடையை விட்டு வெளியேறியிருக்கிறார் சூரஜ். இதற்கிடையே, இரவு சுமார் 9 மணியளவில் கடையை மூடுவதற்குத் தயாரான ஊழியர்கள், ட்ரையல் ரூமைச் சோதனை செய்துள்ளனர். அப்போது, ஷப்னம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஷப்னமின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே, இந்தக் கொலைக்கான பின்னணி குறித்தும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. ஏற்கெனவே அறிமுகமான ஷப்னம் சூரஜ் இடையே கடந்த சில மாதங்களாகப் பிரச்னை இருந்து வந்துள்ளது.

இதையும் படிங்க: “பிரதமரின் மௌனம் ஆச்சரியம்; தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி

சூரஜ் ஷப்னமைக் காதலித்ததாகவும், அவரது காதலை ஷப்னம் ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், சூரஜ் ஏற்கெனவே ஷப்னமைத் துன்புறுத்தியதாகவும், பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக முன்பு புகார் அளித்ததாகவும் ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார் குறித்த விவரங்களை போலீசார் சரிபார்த்து வருகின்றனர். தலைமறைவான சூரஜைப் பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார் டெல்லியை விட்டு தப்பிச் செல்ல முயன்ற சூரஜை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஷப்னமைக் கொலை செய்ததற்கான உண்மையான காரணம் என்ன?, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

சாட்ஜிபிடி மூலம் புத்தகங்கள்; ஒரே நாளில் ISBN பெற்ற நூல்கள், அதே நாளில் ஒப்புதல்! – FIR முழு விவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In