Last Updated:
தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அனந்தநாக் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டம் மிர் பஜார் அருகே உள்ள அக்ரான் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் சுமார் 2:15 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள், அக்ரான் சோதனைச் சாவடியில் தீவிரப் பாதுகாப்பு மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். பாதுகாப்புப் படையினரும் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினார்கள்.
தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அனந்தநாக் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
#WATCH | J&K | Two CRPF personnel injured after unidentified motorcycle-borne assailants opened fire on security personnel deployed at a naka in Kulgam district this afternoon. The injured personnel were shifted to a hospital in Anantnag district for treatment.
(Visuals from the area, deferred by unspecified time; no live operational details disclosed)— ANI (@ANI) November 11, 2026
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைவு நடவடிக்கை படைகள் அனுப்பப்பட்டு, அக்ரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாகச் சூழ்ந்து கொள்ளப்பட்டுள்ளன. தப்பி ஓடிய தீவிரவாதிகளைக் கண்டறிந்து கைது செய்யப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் தீவிரத் தேடுதல் மற்றும் வளைத்து பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

