Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`செங்கோட்டையன் அழுத்தத்தால்தான் இந்தக் கைது நடவடிக்கை நடந்துச்சு..!' – நாதக கார்த்திகா பேட்டி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
`செங்கோட்டையன் அழுத்தத்தால்தான் இந்தக் கைது நடவடிக்கை நடந்துச்சு..!' – நாதக கார்த்திகா பேட்டி
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி கோவையில் உள்ள இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் கார்த்திகா, அவரின் கணவர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலரைக் கைதுசெய்தனர்.

கார்த்திகா ஜாமீன்
கார்த்திகா ஜாமீன்

கார்த்திகா ஜாமீன்

தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகாவின் இந்தக் கைதுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் மட்டுமன்றி திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் கைதான கார்த்திகா ஜாமீனில் இன்று (அக்.23) வெளிவந்திருக்கிறார்.

அவரைத் தொடர்பு கொண்டு இந்தக் கைது நடவடிக்கை குறித்து கேட்டோம். நம்மிடம் பேசிய அவர், “கைது செய்யப்பட்ட அன்று அதிகாலை வேளையில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தபோது பல்லடம் காவல் நிலையத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். ‘உள்ளே வாருங்கள், உட்காருங்கள்’ என்று அவர்களிடம் சொன்னேன்.

‘தவெக அரசின் மிக மோசமான பாசிச வெறியாட்டம் இது.!’- கார்த்திகா கைது குறித்து இடும்பாவனம் கார்த்திக்

உடை மாற்றக்கூட அனுமதிக்கவில்லை

‘கணவர் எங்கே?’ என்று கேட்டார்கள், ‘உள்ளே இருக்கிறார்’ என்றேன். நாங்கள் என்ன விஷயம் என்று கேட்பதற்குள்ளேயே, எனது கணவரை மேலாடை கூட இல்லாத நிலையில் தூக்கிச் சென்றார்கள். நான் இரவு உடையில் (நைட்டியில்) இருந்தேன். உடை மாற்றக்கூட அனுமதிக்கவில்லை. என்னை 4 பெண் காவலர்கள் சூழ்ந்துகொண்டு ஆக்ரோஷமாக அழைத்துச் சென்றார்கள்.

என்ன வழக்கு, சம்மன் இருக்கிறதா? என்று சொல்லுங்கள் என்று கேட்டோம். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். கைது செய்யும்போது அவர்கள் கதறி அழுகிறார்கள். அவர்களுக்குக்கூடப் பதில் சொல்லாமல் எங்கள் இருவரையும் பிடித்துச் சென்றார்கள். இருங்கள், என் கட்சித் தலைவர் சீமான் அண்ணனிடம் தகவல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னதற்கு, எனது போனை வாங்கி வைத்துக்கொண்டு சென்றார்கள்.

கார்த்திகா கைது
கார்த்திகா கைது

காவல்துறை சொல்லும் குற்றச்சாட்டில் உண்மை கிடையாது

முதலில் தாராபுரம் என்று சொல்லிவிட்டு, பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு 4 மணி நேரம் வைத்திருந்தார்கள். வழக்கறிஞரிடமோ, கட்சித் தலைவரிடமோ பேச அனுமதிக்கவில்லை.

காவல்துறை பதிவு செய்திருக்கும் எஃப்.ஐ.ஆர்-ஐ (FIR) படித்துப் பார்த்தால், அது முழுக்க முழுக்கப் பொய்க் குற்றச்சாட்டாக உள்ளது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பெண் காவலர்களை அவதூறாகப் பேசிவிட்டதாகச் சொல்கிறார்கள்; அப்படியெல்லாம் நாங்கள் பேசவில்லை. இப்போது வரை ஒரு பெண் வேட்பாளர் என்ற முறையில் என்னை தான் அவர்கள் அவதூறாகப் பேசுகிறார்கள், காவலர்துறை சொல்லும் குற்றச்சாட்டில் உண்மை கிடையாது.

தவெக அரசுக்கு ABCD கூட தெரியவில்லை

மாலை 6 அல்லது 7 மணிக்குத்தான் (கிட்டத்தட்ட 12 மணி நேரம் கழித்து) கைது குறிப்பாணையையே என்னிடம் காட்டினார்கள். நீதிபதி முன்னால் எங்களை ஆஜர்படுத்தியபோது 6 மணி நேரம் விசாரணை நடந்தது. நாங்கள் நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். விசாரணையை சரியாக கையாளுவார்கள் என்று நம்புகிறோம்.

தற்போதைய அரசுக்கு நிர்வாகத்தில் ஏபிசிடி (ABCD) கூட தெரியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அரிசி, பருப்பு, காய்கறி என அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கார்த்திகா
கார்த்திகா

எங்களை ஒடுக்க நினைக்கிறார்கள்

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கேஸ் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு அரசு வாங்குகிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மத்திய அரசின் மின்சாரப் பங்கீட்டைக் கேட்டுப் பெறாமல் ஊழல் செய்கிறார்கள். 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடக்கும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. செவிலியர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. மக்கள் குறைகளை நாங்கள் மேடைகளில் பேசி வருவதால், எங்களை ஒடுக்க நினைக்கிறார்கள்.

செங்கோட்டையன் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் அழுத்தத்தால்தான் கைது.!

நாங்கள் திரையிலிருந்து வந்தவர்கள் அல்ல, போராட்டக் களங்களில் இருந்து வந்தவர்கள். மக்களுக்காகத் தொடர்ந்து களத்தில் நிற்போம். சீமான் அண்ணன் என்னிடம் பேசி தைரியம் கூறினார். அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் அழுத்தத்தால்தான் இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளது. சர்வாதிகாரப் போக்கிற்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள்.

முதல்வர் விஜய், அமைச்சர் செங்கோட்டையன்
முதல்வர் விஜய், அமைச்சர் செங்கோட்டையன்

அரசியல் தலைவர்களுக்கு நன்றி

என்னையும் என் கணவரையும் தவெக அரசு கைது செய்ததற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

“இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்..” அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளிக்கு முன் வரவு வைக்கப்படும் பி.எம்.கிசான் 24வது தவணை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளிக்கு முன் வரவு வைக்கப்படும் பி.எம்.கிசான் 24வது தவணை

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளிக்கு முன் வரவு வைக்கப்படும் பி.எம்.கிசான் 24வது தவணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In