Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செங்கல்பட்டு: “வீடு கட்டித் தந்தும் வீடில்லாத நிலை” – கொடப்பட்டணம் இருளர்களின் கோரிக்கை என்ன? | Irulars of Kodapattanam Struggle Without Homes Even After Houses Built

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2026
in அரசியல் செய்திகள்
0
செங்கல்பட்டு: “வீடு கட்டித் தந்தும் வீடில்லாத நிலை” – கொடப்பட்டணம் இருளர்களின் கோரிக்கை என்ன? | Irulars of Kodapattanam Struggle Without Homes Even After Houses Built
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடப்பட்டணத்தில் உள்ள இருளர் குடியிருப்பு ஊரக வளர்ச்சித்துறையின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில் வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியில், வீடுகளை முழுதாகக் கட்டி முடிக்காமல் அவர்களுக்குப் பாதியிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அங்கு உள்ள முனியம்மாள் என்பவரிடம் விசாரித்த பொழுது, ”நாங்கள் பூர்வீகமாக இங்குதான் வசித்து வருகின்றோம். நாங்கள் அனைவரும் தினக்கூலி வேலைக்குச் சென்று எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றோம். அரசு சார்பில் எங்களுக்கு 8 வீடுகள் கட்டித்தரப்படுவதாகக் கூறினார்கள்.

பின்பு 2 வீடுகள் மட்டுமே முழுதாகக் கட்டி முடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. மீதம் உள்ள 6 வீடுகளும் யாவும் முழுமையாகக் கட்டி முடிக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு விட்டார்கள் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை.

கட்டி முடிக்கப்படாத வீடுகள்

கட்டி முடிக்கப்படாத வீடுகள்

கொடுக்கப்பட்ட வீட்டில் நாங்கள் 15 பேர் வசித்து வருகின்றோம். அனைத்து வீடுகளும் சிறிய மழை பெய்தாலும் மழைநீர் வீடு முழுவதும் ஒழுகுகின்றது.

எங்களுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட கழிவறையிலும் மழைப் பெய்தால் மழைநீர் ஒழுகுகின்றது. எங்களுக்கு குடிநீர் வசதியும் இல்லாததால் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் வரும் தண்ணீரையே உபயோகப்படுத்துகிறோம். எங்களுக்கு குடிநீர் வசதியும் செய்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்”‘ என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

முனியம்மாள், சகுந்தலா

முனியம்மாள், சகுந்தலா

மேலும் அங்கு வசித்து வரும் சகுந்தலா என்பவரிடம் விசாரித்த பொழுது, ”எங்கள் மகனுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் தரைக் கூட சரியாக அமைக்காமல் கல்லும் ஜல்லியுமாக அப்படியே உள்ளது.

மேலும் அந்த வீட்டிற்கு ஜன்னல்கள் எதுவும் வைக்காமல் அப்படியே வெட்டவெளியாக விட்டுவைத்து உள்ளார்கள், மேலும் ஒரு சில வீடுகளிலும் எங்கள் வீடுகளிலும் ஜன்னல்கள் மேம்போக்காக வைத்து பூசாமல் அப்படியே விட்டு வைத்து உள்ளார்கள்.

கட்டி முடிக்கப்படாத வீடுகள்

கட்டி முடிக்கப்படாத வீடுகள்

மேலே அமைக்கப்பட்டுள்ள விதானம் சரியாக சுவர்களுடன் இணைக்கப்படாததால் அனைத்து வீடுகளும் சிறிய மழைக்கே மழைநீரில் மிதக்கின்றன. எனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் சன்சேடு (Sunshade) பெயர்ந்து விழும் நிலையில் சாய்ந்தவாறு மிகவும் ஆபத்தாக உள்ளது.

மேலும் எந்த வீட்டிற்கும் மின்சார சுவிட்ச்களோ அல்லது மின்விளக்கு வசதியோ வழங்காமலே நேரடியாக அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது.

மின் இணைப்பிற்காக சுவற்றில் போடப்பட்ட துளை கூட மீண்டும் பூசாமல் அப்படியே விட்டு வைத்துள்ளனர். அனைத்து வீடுகளுக்கும் செல்லும் பாதை கூட சரியாக அமைக்கப்படவில்லை.

அனைத்து வீடுகளும் உட்புறமும் வெளிப்புறமும் விரிசல் விழுந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மேலும் எந்த வீட்டிற்கும் கழிப்பிட வசதியும் முறையாகச் செய்து தரவில்லை. அதே போன்று அந்த 6 வீட்டிற்கும் வர்ணம் கூட பூசாமல் அரைகுறையாக வெள்ளை அடித்து வைத்துள்ளனர். இந்த வீடுகள் கட்டிக்கொடுத்தும் நாங்கள் வீடுகள் இல்லாமல் வாழ்வது போன்றே உணர்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.



.

Previous Post

திருப்பதி தரிசனத்திற்கு பிளான்-பி தயாரா? ஞாயிறு கூட்ட நெரிசலில் சிக்காமல் விரைவாக தரிசனம் செய்வது எப்படி? | Tirumala Darshan Updates: How To Manage Sunday Crowd And Plan-B For TTD Darshan (Oct 2026)

Next Post

சென்னை கடற்கரைக்குச் செல்கிறீர்களா? இன்று மாலை 7 மணி வரை கடலில் இறங்க வேண்டாம் – எச்சரிக்கை! | Chennai Beach Rip Current Alert: Essential Safety Warning For ECR And Marina (Oct 4, 2026)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை கடற்கரைக்குச் செல்கிறீர்களா? இன்று மாலை 7 மணி வரை கடலில் இறங்க வேண்டாம் – எச்சரிக்கை! | Chennai Beach Rip Current Alert: Essential Safety Warning For ECR And Marina (Oct 4, 2026)

சென்னை கடற்கரைக்குச் செல்கிறீர்களா? இன்று மாலை 7 மணி வரை கடலில் இறங்க வேண்டாம் - எச்சரிக்கை! | Chennai Beach Rip Current Alert: Essential Safety Warning For ECR And Marina (Oct 4, 2026)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In