Wednesday, November 25, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சீனாவின் CHIEF vs இந்தியாவின் சுதர்சன்: ஒரு விரிவான ஒப்பீடு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 25, 2026
in அரசியல் செய்திகள்
0
சீனாவின் CHIEF vs இந்தியாவின் சுதர்சன்: ஒரு விரிவான ஒப்பீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹைப்பர் கிராவிட்டி ஆய்வுத் தொழில்நுட்பத்தைச் சீனா முதன்முதலில் கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து எனப் பல நாடுகள் பல ஆண்டுகளாக இத்தகைய ஆய்வுகளைச் செய்து வருகின்றன. அமெரிக்காவின் Vicksburg மையம் 1995-ம் ஆண்டிலேயே செயல்படத் தொடங்கியது.   நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

ஆனால், CHIEF திட்டத்தின் தனிச்சிறப்பு அதன் பிரம்மாண்டமான திறனும், ஒரே வளாகத்தில் பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பும்தான்.

இந்தியாவும் இதில் பின்தங்கிவிடவில்லை. மும்பை ஐஐடியில் ‘SUDARSHAN’ எனும் தேசிய புவித் தொழில்நுட்ப மையவிலக்கு ஆய்வு மையம் செயல்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறை (DST), பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO), அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன் உருவானது இது. இதன் இயந்திரம் 200 மடங்கு ஈர்ப்பு வரை உருவாக்கும்; 100g-ல் 2.5 டன் சுமையைத் தாங்கும்; மொத்தத் திறன் 250 g·tonne. மண் சரிவு, நிலச்சரிவு, வலுவூட்டப்பட்ட மண் கட்டமைப்புகள், நிலத்தடிக் கட்டமைப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்கு இது உதவுகிறது.

எண்களில் CHIEF-உடன் ஒப்பிட முடியாது என்பது உண்மைதான். ஆனால் அடித்தளம் இங்கும் இருக்கிறது என்பதும் உண்மை.

அடுத்து என்ன?

CHIEF போன்ற இயந்திரங்கள் இயற்கைப் பேரிடர்களைத் தடுத்து நிறுத்தும் மந்திரக் கருவிகள் அல்ல. ஆனால், பேரிடர்களுக்கு முன்பே அவற்றின் தாக்கங்களைப் புரிந்துகொள்ளவும், கட்டமைப்புகளின் பலவீனங்களைக் கண்டறியவும் உதவும் அறிவியல் கருவிகள். அணைகள், பாலங்கள், சுரங்கங்கள், கடலோரக் கட்டமைப்புகள் எனப் பெரிய திட்டங்களை உருவாக்கும்போது, அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இதுபோன்ற ஆய்வுகள் முக்கியமானவை.

அதீத ஈர்ப்பு, மேம்பட்ட கணினி மாதிரிகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவை இணையும்போது, ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய கேள்விகளுக்கு விரைவிலேயே விடை கிடைக்கலாம்.

மிகப் பெரிய அணைகளையும் அடர்ந்த நகரங்களையும் கொண்ட இந்தியா, SUDARSHAN போன்ற மையங்களின் திறனை விரிவுபடுத்த வேண்டாமா? அந்த ஆய்வு முடிவுகள் அணை மேலாண்மை முடிவுகளில் உண்மையாகப் பயன்படுகின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான பதிலில்தான், அடுத்த பேரிடரில் நாம் எவ்வளவு தயாராக இருப்போம் என்பது அடங்கியிருக்கிறது.

தொழில்நுட்பத்தை உருவாக்குவது ஒரு பக்கம். அதன் மூலம் கிடைக்கும் ஆய்வு முடிவுகளை நடைமுறைத் திட்டங்களிலும் நிர்வாக முடிவுகளிலும் பயன்படுத்துவதுதான் உண்மையான சவால். சீனாவின் இந்த முயற்சி நமக்கு உணர்த்தும் முக்கியமான பாடமும் அதுதான்.!



.

Previous Post

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்… EMU ஏசி மின்சார ரயில் சேவைகள் நீட்டிப்பு | Chennai EMU AC Train Services Increased for Commuters

Next Post

மே 1 முதல் அமலுக்கு வந்துள்ள IRCTC யின் புதிய விதிகள்…ரயில் பயணிகளே இது உங்களுக்கு தான் | IRCTC New Rules Effective May 1st: Important for Train Passengers

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மே 1 முதல் அமலுக்கு வந்துள்ள IRCTC யின் புதிய விதிகள்…ரயில் பயணிகளே இது உங்களுக்கு தான் | IRCTC New Rules Effective May 1st: Important for Train Passengers

மே 1 முதல் அமலுக்கு வந்துள்ள IRCTC யின் புதிய விதிகள்...ரயில் பயணிகளே இது உங்களுக்கு தான் | IRCTC New Rules Effective May 1st: Important for Train Passengers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In