Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிபிஐ-க்கு அவகாசம்; `ஜாமீன்’ இடைக்காலத் தடை நீடிப்பு: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2026
in அரசியல் செய்திகள்
0
சிபிஐ-க்கு அவகாசம்; `ஜாமீன்’ இடைக்காலத் தடை நீடிப்பு: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்து அவர்களை மீண்டும் காவலில் அடைக்கக் கோரும் சி.பி.ஐ-யின் கோரிக்கை மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சிபிஐ மற்றும் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு காரசார வாதங்கள்:

“வழக்கின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். விசாரணையை முழுமையாக முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய எங்களுக்கு மேலும் 3 மாத காலம் தேவைப்படுகிறது. தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் வெளியிலிருப்பது சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு இடையூறாக அமையும். சாட்சிகளை அச்சுறுத்தவும், சாட்சியங்களைக் கலைக்கவும் வாய்ப்புள்ளதால், அவர்களின் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் நீதிமன்றக் காவலில் அடைக்க வேண்டும்” என சி.பி.ஐ வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சி.பி.ஐ-யின் கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “சி.பி.ஐ கூறுவது ஒரு பொதுவான குற்றச்சாட்டு மட்டுமே. ஒவ்வொரு வழக்குகளிலும் “குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள், சாட்சிகளை மிரட்டுவார்கள்’ என ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளைத் தான் அடுக்குகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங்

சாட்சிகளையோ அல்லது சாட்சியங்களையோ கலைக்க முற்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லாமல் வெறும் ஊகங்களின் அடிப்படையில் வைக்கும் குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்கக் கூடாது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டிய அவசியமில்லை” என வாதாடினர்.

தமிழக அரசு தரப்பு கோரிக்கை:

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.கருணாகரன், “இவ்வழக்கு தொடர்பாகத் தமிழக அரசு அதிகாரிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கைவிட வேண்டும்” என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தது:

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் தற்போதைய புலன் விசாரணை நிலை குறித்து விரிவான புதிய அறிக்கையை 2 வாரங்களுக்குள் சி.பி.ஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சி.பி.ஐ தாக்கல் செய்யும் புதிய நிலை அறிக்கைக்கு அடுத்த 2 வாரங்களுக்குள் அனைத்துத் தரப்பினரும் (மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள்) தங்கள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.



.

Previous Post

வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ராஜேந்திர சேது பாலப் பணிகளால் ரயில் சேவையில் அதிரடி மாற்றம் | Vande Bharat Express Route Changed: Rajendra Setu Bridge Maintenance Updates For September 2026

Next Post

காசி வாரணாசி: கங்கை நீர்மட்டம் குறைந்தது, படிகட்டுகள் திறப்பு – பக்தர்கள் கவனத்திற்கு! | Varanasi Ghats Reopening Update 2026: Ganga Water Level, Aarti Timings, And Boat Ride Guidelines

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காசி வாரணாசி: கங்கை நீர்மட்டம் குறைந்தது, படிகட்டுகள் திறப்பு – பக்தர்கள் கவனத்திற்கு! | Varanasi Ghats Reopening Update 2026: Ganga Water Level, Aarti Timings, And Boat Ride Guidelines

காசி வாரணாசி: கங்கை நீர்மட்டம் குறைந்தது, படிகட்டுகள் திறப்பு - பக்தர்கள் கவனத்திற்கு! | Varanasi Ghats Reopening Update 2026: Ganga Water Level, Aarti Timings, And Boat Ride Guidelines

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In