பம்பை நதி, அதன் கிளை நதிகள் மற்றும் குளிக்கும் படித்துறைகளில் பக்தர்கள் பயன்படுத்திய ஆடைகள், துணிகள், பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை வீசுவதற்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திலீப் கே. கைனிக்கரா பிறப்பித்துள்ள இந்த உத்தரவின்படி, தடையை மீறுபவர்களுக்கு இடத்திலேயே ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

