Last Updated:
காவிரி நீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 17 புள்ளி 604 டிஎம்சியை, கர்நாடக அரசு உடனடியாக திறப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு விகிதாச்சார அடிப்படையில் 22 ஆயிரம் கனஅடி நீர் வீதம், அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால், அதனை கருத்தில் கொள்ளாமல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வெறும் 9 ஆயிரம் கனஅடி வீதமாக 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
வறட்சி காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டால் கூட தமிழ்நாட்டிற்கு 43 புள்ளி 202 டிஎம்சி நீர் கிடைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது வரை 25.598 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த பாரபட்சமான உத்தரவை கூட கர்நாடக அரசு செயல்படுத்துவது இல்லை எனக் குற்றம்சாட்டியிருக்கும் தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட மறுப்பதால் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

