Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காதலனுடன் ஹோம்ஸ்டேவுக்கு சென்ற இளம்பெண்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2026
in அரசியல் செய்திகள்
0
காதலனுடன் ஹோம்ஸ்டேவுக்கு சென்ற இளம்பெண்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 27, 2026 7:48 PM IST

அசாம் மாநிலம் கவுகாத்தியில் காதலனுடன் விடுதியில் தங்கியிருந்த, கல்லூரி மாணவி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நிமிஷா தகுரியா - ஆசிஃப் அலி
நிமிஷா தகுரியா – ஆசிஃப் அலி

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு ‘ஹோம்ஸ்டே’ தங்கும் விடுதியில், இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இப்பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.

இதுக்குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஆண் நண்பருடன் 5 நாட்களாக ஹோம்ஸ்டேவில் தங்கி இருந்த பெண்ணிற்கு என்ன நடந்தது?, தற்கொலையா? இல்லை வேறு ஏதேனும் அசம்பாவிதமா? என பெண்ணின் காதலனிடம் விசாரணையைத் தொடங்கினர்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி, வழக்கில் பல அதிர்ச்சிகளை வெட்ட வெளிச்சமாக்கியது. தாராபூர் பகுதியில் வசித்து வந்த நிமிஷா தகுரியா என்ற இளம்பெண், கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயின்று வந்தார். அவரது காதலன் ஆசிஃப் அலி ரேபிடோ டிரைவாக வேலை பார்த்து வந்துள்ளார். சில வருடங்களாக காதலித்து வந்த இருவரும், சம்பவம் நிகழ்ந்த ‘ருத்ராஸ் கிச்சன்’ ஹோம்ஸ்டேவில் கடந்த 5 நாட்களாக தங்கி இருந்தனர்.

சம்பவ நிகழ்ந்த அன்று அதிகாலை 2 மணிக்கு தனது தாயைத் தொடர்புகொண்ட நிமிஷா தனது காதலனால் தாக்கப்பட்டதாகவும், மார்பில் உதைக்கப்பட்டதாகவும் கூறியதாகத் தெரிகிறது. அதன் பின்னர் அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்கலை கழக விடுதியில் நிமிஷாவுடன் தங்கி இருந்த தோழிகளை அழைத்துக் கேட்டபோது அவர் காதலனுடன் சென்றது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பணப் பிரச்சனையில் மனைவிக்கு நடந்த கொடூரம்.. கணவன் செய்த வெறிச்செயல்.. என்ன நடந்தது?

இதனால் ஆசிஃப் அலி, தான் தனது மகளை அடித்து கொன்றிருப்பதாகப் பெண்ணின் தந்தை குற்றம் சாட்டி உள்ளார். முதற்கட்ட விசாரணையில் மூன்று இளைஞர்கள் நிமிஷாவை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். பெண்ணின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் முறையாக தகவல் அளிக்கவில்லை. நிமிஷாவின் உயிரிழப்புக்குப் பின் அவரது செல்போனும் காதலனின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இப்படி அடுத்தடுத்து பல்வேறு சந்தேகங்கள் நீடிப்பதால் இது திட்டமிட்ட கொலையாகக் கூட இருக்கலாம் என விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி கைது செய்யப்பட்ட ஆசிஃப் அலியிடம் தொடர் விசாரணை நீடிக்கும் நிலையில் விடுதியின் உரிமையாளரிடம் விசாரித்துள்ளனர். அதில் உயிரிழந்த பெண் ஏற்கனவே பலமுறை அங்கு தங்க வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அது மேலும் சந்தேகத்தைக் கூட்டியுள்ள நிலையில் விசாரணையின் முடிவிலேயே நிமிஷாவின் இறப்பில் உள்ள மர்மம் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



.

Previous Post

தென் தமிழகக் கடலோரப் பயணம் திட்டமா? கடல் சீற்றம் எச்சரிக்கை – சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு! | South Tamil Nadu Sea Swell Warning 2026: Safety Guidelines For Tourists

Next Post

ஈரானின் 7 நாள் திட்டத்தை நிராகரித்த ட்ரம்ப்: ஹார்முஸ் அடுத்து என்ன?|Iran Offers 7-Day Plan, Trump Says ‘I Reject Their Proposal’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்க midterm தேர்தல்: வென்றால் $5,000 தருவதாக ட்ரம்ப் அறிவிப்பு|Trump’s $5,000 Election Promise: Dividend or Vote Bait?

ஈரானின் 7 நாள் திட்டத்தை நிராகரித்த ட்ரம்ப்: ஹார்முஸ் அடுத்து என்ன?|Iran Offers 7-Day Plan, Trump Says ‘I Reject Their Proposal’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In