Monday, November 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காங்கிரஸ், அகாலி தளத்தை ஓரங்கட்டிய தலித் வாக்குகள்: ஆம் ஆத்மியின் வெற்றி ரகசியமும், நெருக்கடியும்!| Punjab Politics and the Dalit Vote Bank: What Role Do They Play?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2026
in அரசியல் செய்திகள்
0
காங்கிரஸ், அகாலி தளத்தை ஓரங்கட்டிய தலித் வாக்குகள்: ஆம் ஆத்மியின் வெற்றி ரகசியமும், நெருக்கடியும்!| Punjab Politics and the Dalit Vote Bank: What Role Do They Play?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலத்தின் தலித் அரசியல் என்பது பெரும்பாலும் பெரிய அளவில் விவாதிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

அதைத்தான் நாம் விரிவாக அலசி ஆராயப் போகிறோம்!

பஞ்சாப் மாநிலத்தில் தலித் மக்களின் வாக்கு வங்கி எப்படி காங்கிரஸ், அகாலி தளம், மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி  போன்ற பாரம்பரியக் கட்சிகளிடமிருந்து விலகி, ஆம் ஆத்மி கட்சிக்கு பெருமளவில் மாறியது என்பதை மிக ஆழமாக பார்க்கப் போகிறோம். 

 பஞ்சாப் மாநிலத்தின் தனித்துவமான சாதி மற்றும் மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்:

இந்தியாவில் உள்ள மொத்த பட்டியலின மக்களின் பங்கு தோராயமாக 16.6% ஆகும். ஆனால், பஞ்சாபில் இந்த விகிதம் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31.9% என்ற அளவில் மிக அதிகமாக உள்ளது. இந்தியாவின் மொத்த பட்டியலின மக்கள் தொகையில் சுமார் 4.4% பஞ்சாபில் வாழ்கின்றனர்.பஞ்சாபில் உள்ள பட்டியலின மக்களிடையே சாமார்கள், ஆத்-தர்மி, மற்றும் ராம்தாசியக்கள் ஆகியோரின் அமைப்பு ரீதியான தாக்கம் அதிகமாக உள்ளது. அதேசமயம், மஜாபிகள்  மற்றும் வால்மீகிகள் போன்ற பிற பிரிவினர் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பின்தங்கியே உள்ளனர்.சீக்கியம் மற்றும் இஸ்லாம் போன்ற மதங்கள் சாதி பாகுபாடுகளை மறுத்தாலும், பஞ்சாப் கிராமப்புறங்களில் சாதி அடையாளங்களும், அதையொட்டிய சமூக விலக்கல்களும் இன்றளவும் நடைமுறையில் தொடர்கிறது.

பஞ்சாப் அரசியல் களம்

பஞ்சாப் அரசியல் களம்

2022 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மியின் சரித்திர சாதனை 

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திய சாதனை இந்திய அரசியலையே உலுக்கியது:

117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை (42% வாக்கு வங்கி) கைப்பற்றி தனிப்பெரும்பட்சி ஆட்சியைப் பிடித்தது.

மாநிலத்திலுள்ள மொத்தம் 34 பட்டியலின ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி மட்டும் 29 இடங்களில் (85.29% வெற்றி விகிதம்) வெற்றி பெற்றது. பஞ்சாப் தேர்தல் வரலாற்றில் எந்தவொரு கட்சியும் எட்டியிராத உச்சம் இதுவாகும்.

 மல்வா பகுதியில் 20-ல் 19 இடங்களையும், தோவாபா மற்றும் மஜா பகுதிகளில் 14-ல் 9 இடங்களையும் ஆம் ஆத்மி கைப்பற்றியது

Punjab’s CM Shri Bhagwant Mann

Punjab’s CM Shri Bhagwant Mann

 காங்கிரஸ் கட்சி ஏன் தலித் மக்களின் ஆதரவை இழந்தது? 

 காங்கிரஸ் கட்சி சாதி/வகுப்புவாத நிலைப்பாடுகளைத் தவிர்த்து அனைத்து சமூகங்களையும் அரவணைப்பதாகக் கூறி வந்தாலும், தலித் மக்கள் தங்களை வெறும் “அடிமை வாக்காளர்களாக’ நடத்துவதை நீண்ட காலமாக எதிர்த்து வந்தனர். ஆட்சி அதிகாரத்தில் உண்மையான பங்களிப்பு வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் மாற்றைத் தேடத் தொடங்கினர்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

2022 தேர்தலுக்குச் சற்று முன்பு சரஞ்ஜித் சிங் சன்னி அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தலித் வாக்குகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயன்றது. இருப்பினும், கட்சியின் உள்கட்சி மோதல்கள், நவஜோத் சிங் சித்துவுடனான அதிகாரப் போட்டி மற்றும் தலித் அடையாள அரசியலைத் தாண்டி முறையான திட்டமிடல் இல்லாததால் இந்த வியூகம் படுதோல்வி அடைந்தது. இதன் விளைவாக காங்கிரஸ் வெறும் 18 இடங்களை மட்டுமே பெற முடிந்தது

 அகாலி தளம் மற்றும் பாஜகவின் செல்வாக்கு சரிவு

அகாலி தளம் கட்சி அடிப்படையில் மதம் மற்றும் அரசியலை இணைத்துப் பேசினாலும், 1962 முதல் அது ஜாட் சீக்கியர்களின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது.

சீக்கியர்களின் மத வழிபாட்டுத் தலமான குருத்வாராக்களை நிர்வகிக்கும் சிறுவன் மணி குருத்வாரா பிரபந்தக் குழு சுருக்கமாக எஸ் ஜி பி சி போன்ற முக்கியச் சீக்கிய அமைப்புகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு பதவிகளில் 80% ஜாட் சீக்கியர்களிடமும், தலித் சீக்கியர்களுக்கு வெறும் 5% மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பல்வேறு புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சமூக விலக்கல் காரணமாகவே தலித் மக்கள் அகாலி தளத்தை விட்டு விலகி செல்லத் தொடங்கினர்.

பஞ்சாப் அரசியல் களம்

பஞ்சாப் அரசியல் களம்

விவசாயச் சட்டங்களுக்கு எதிரான கடும் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களாலும் சிரோன்மணி அகாலி தளத்துடன் நீண்ட நெடிய கூட்டணியை வைத்திருந்ததாலும் பாஜகவுக்கும் தலித் வாக்குகள் கைகூடாமலேயே இருந்தது. 

பகுஜன் சமாஜ் கட்சியின்  பின்னடைவு: காரணங்கள் என்ன?

பஞ்சாபில் தலித் மக்கள் கணிசமாக இருந்தாலும், பகுஜன் சமாஜ் கட்சியால் அங்கு வலுவான காலூன்ற முடியவில்லை. 1992-ல் 16.32% ஆக இருந்த BSP-யின் வாக்கு வங்கி, 2022 தேர்தலில் 1.7% ஆகக் குறைந்தது.

வெறும் ‘சாதி அடையாளம்’ அல்லது வெறும் கோஷங்களை மட்டும் நம்பியிராமல், வாக்காளர்கள் தங்களின் பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்தனர். பகுஜன் சமாஜ் கட்சியில் அடிமட்ட கட்டமைப்பு  மற்றும் முறையான சமூக-அரசியல் திட்டமிடல் இல்லாததே அதன் தொடர் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது மேலும் உத்தர பிரதேசத்தில் மாயாவதிக்கு கிடைத்த வீழ்ச்சியும் பஞ்சாப் மாநிலத்தில் அக்கட்சியின் சரிவுக்கு பெரும் காரணமாக அமைந்தது.

ஆம் ஆத்மியின் வெற்றிக்கு வழிவகுத்த காரணிகள் 

கடந்த 70 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து ஊழலிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் அகாலி தளத்திற்கு ஒரு பாடம் புகட்ட மக்கள் துடித்தனர். டெல்லியில் ஆம் ஆத்மி அரசு நடைமுறைப்படுத்திய கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் பஞ்சாப் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் மற்றும் பெண்களின் கணக்குகளில் மாதந்தோறும் உதவித்தொகை போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் பெண்களையும் இளைஞர்களையும் ஆம் ஆத்மி பக்கம் ஈர்த்தன.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

நகைச்சுவை நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த பகவந்த் மன் அவர்களின் எளிமையான பேச்சு மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. இவையெல்லாம் சேர்ந்துதான் ஒட்டுமொத்த தலித் வாக்கு வங்கியும் அப்படியே ஆம் ஆத்மிக்கு மாற அவர்கள் சுலபமாக ஆட்சிக்கட்டிலிலும் அமர்ந்தார்கள்.

ம

தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவையில் நான்கு தலித்துகள் இடம்பெற்று இருக்கிறார்கள். அதேபோல பஞ்சாப் மாநிலத்திற்கான வேட்பாளர் பட்டியலிலும் பார்த்து பார்த்து தலித்துகளுக்கான முன்னுரிமையை ஆம் ஆத்மி கட்சி வழங்கி வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் அதே உள்கட்சி பூசல் ,பாஜக சிரோன்மணி அகாலிதளம் மீண்டும் கூட்டணி வாய்ப்பு ஆகியவை தங்களுக்கான தலித் வாக்கு வங்கியை பாதிக்காது என ஆம் ஆத்மி திடமாக நம்புகிறது.

பஞ்சாப் அரசியல் களம்

பஞ்சாப் அரசியல் களம்

 எனினும் சில வாரங்களுக்கு முன்பு குல்சர் என்ற தலித் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும்பூதாகரமான விஷயமாக மாறி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் நிதித்துறை அமைச்சர் ஹர்பல் சிங் சீமா பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்திருக்கும் போதை பொருள் புழக்கம் குறித்து கேள்வி எழுப்பிய தலித் சமூகத்தை சேர்ந்த குல்சர் என்ற நபரை ஜாதிய ரீதியில் திட்டியதாக தெரிகிறது இதனை அடுத்து தான் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற புகாரை அவரது குடும்பத்தார் தெரிவிக்க இதை வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.

 இருந்தாலும் இதையெல்லாம் தங்களுக்கு பாதகமான விஷயமாக மாறாது என்றும் ஆம் ஆத்மி நம்புகிறார்கள்.

நம்பிக்கை பொய்க்குமா? அல்லது நிறைவேறுமா தேர்தல் களம்  முடிவு செய்யும்



.

Previous Post

தீக்குளித்து காவல் நிலையம் நுழைந்த பெண்: “என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?” – தமிழிசை சௌந்தரராஜன் | Woman enters police station after setting herself on fire: “What is happening in Tamil Nadu?” – Tamilisai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In