Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கரூர்: ‘சஷ்டி நாளில் கிடா வெட்ட அனுமதிக்க கூடாது!’கரூர் எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு – karur temple festival controversy issue!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2026
in அரசியல் செய்திகள்
0
கரூர்: ‘சஷ்டி நாளில் கிடா வெட்ட அனுமதிக்க கூடாது!’கரூர் எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு – karur temple festival controversy issue!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கடவூர் தாலுக்கா தே.இடையப்பட்டி, காமராஜ் நகர் ஊர்பொதுமக்கள் கோவில் திருவிழா ஒற்றுமையாக நடத்த கோரியும் , கந்த கரூர் அருகே சஷ்டி நாளில் கிடாவெட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் கரூர் எஸ்.பி அலுவகத்தில் இன்று மாலை கோரிக்கை மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர் நாகமணி தெரிவிக்கையில், “கடவூர் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 18 கிராம பொதுமக்கள் தே.இடையப்பட்டி காமராஜ் நகர் பகுதியில் சுமார் 200 குடிபாடுகள் கொண்ட தெய்வமான ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி மற்றும் ஸ்ரீ முருகன் மற்றும் ஸ்ரீ அக்னி பாப்பாத்தி அம்மனை ஒவ்வொரு ஆடி மாதமும் திருவிழா கொண்டாடி வருகின்றோம். ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒன்று கூடி, விமர்சையாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் மற்றும் பொங்கல் வைத்து, கிடாவெட்டு நடத்துவது காலங்கலமாக வழக்கமாக தொடர்ந்து வருகிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா செலவுத் தொகை சம்பந்தமாக தனிப்பட்ட சிலர் கணக்கு கேட்டது தொடர்பாக ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால், கோயில் நிர்வாக குழுவிற்கும் குடிபாட்டு மக்களுக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாமல் திருவிழா நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு , கோயில் திருவிழாவை தனிப்பட்ட முறையில் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்து வந்ததால், இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோயில் திருவிழாவை ஒற்றுமையாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்க வந்திருக்கிறோம்” என்றார்.

தனிநபர்கள் சிலர் திருவிழா ஏற்பாடுகளை செய்து, கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் ஞாயிற்றுக்கிழமை நாளில் கிடாவெட்டு நடத்த இருப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் அமைதியான முறையில் திருவிழா நடத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததால் மக்கள் நம்பிக்கையுடன் திரும்பி சென்றனர்.



.

Previous Post

தலித் + இஸ்லாமியர் = 40% வாக்குகள் பாஜக எப்படி வெல்கிறது? UP Election 2027 | DECODE | How bjp wins in up elections -Decode

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In