Sunday, November 22, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`ஓடும் ரயிலில் ரூ.208 கோடி மதிப்பிலான பொருள்கள் கொள்ளை' – வீடியோ எடுத்து பகிந்துகொண்ட கொள்ளையர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2026
in அரசியல் செய்திகள்
0
`ஓடும் ரயிலில் ரூ.208 கோடி மதிப்பிலான பொருள்கள் கொள்ளை' – வீடியோ எடுத்து பகிந்துகொண்ட கொள்ளையர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஓடும் சரக்கு ரயில்களைத் திட்டமிட்டு மறித்து, சுமார் 22.5 மில்லியன் டாலர் (ரூ.208 கோடி) மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்ததாக 14 பேர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மெகா கொள்ளைச் சம்பவம் குறித்து CNN ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதிக மதிப்புள்ள பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களை இந்தக் கும்பல் குறிவைத்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாங் பீச் துறைமுகங்கள் வழியாக அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் பிராண்டட் காலணிகள் (Sneakers), மின்சாரக் கருவிகள் (Power tools) உள்ளிட்ட பொருட்களை இவர்கள் கொள்ளையடித்து கள்ளச்சந்தையில் விற்று வந்துள்ளனர். தெற்கு கலிபோர்னியாவின் பிகோ ரிவேரா (Pico Rivera) மற்றும் புல்லர்டன் (Fullerton) உள்ளிட்ட ரயில் வழித்தடங்களில் இந்தக் கொள்ளைத் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் தண்டவாளப் பகுதிகளுக்குச் சென்று, ஓடும் ரயில்களில் ஏறி அதன் தொழில்நுட்பத்தைச் செயலிழக்கச் செய்துள்ளனர். இதனால் ரயில்கள் அவசரகால அடிப்படையில் நடுவழியில் நிறுத்தப்படும்போது, அதில் இருந்த சரக்குகளைத் தங்களது வாகனங்களில் ஏற்றி ரகசியக் கிடங்குகளில் (Stash houses) பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். கொள்ளையடித்த விவரங்களைக் குற்றவாளிகள் தங்களது ‘குரூப் சாட்’ (Group chats) மூலமாகப் பகிர்ந்து கொண்டதுடன், கொள்ளையடிக்கும் காட்சிகளைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

This morning we arrested a train robbery crew.

Nathan Daniel Angel, 21, of East Los Angeles, and 13 co-defendants have been federally charged with orchestrating a $22.5 million cargo theft conspiracy. The indictment alleges the crew burglarized at least 36 freight trains across Southern California, stealing Nike sneakers, Milwaukee tools, electronics, and other merchandise for black-market resale.

The defendants allegedly stopped trains by cutting air hoses, boarded rail cars, moved the goods to stash houses, and sold them via fence networks and social media.

Train robberies cause enormous economic damage because of the valuable cargo involved. These defendants face long federal prison sentences if convicted. All are presumed innocent until proven guilty.

— F.A. United States Attorney Bill Essayli (@USAttyEssayli) November 19, 2026

இந்தக் கும்பலுக்கு 21 வயது இளைஞர் ஒருவர் தலைமையேற்று நடத்தியுள்ளார். அவருடன் 23 முதல் 38 வயதுக்குட்பட்ட 13 பேர் கூட்டாளிகளாகச் செயல்பட்டுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து அமெரிக்க வழக்கறிஞர் பில் எஸேலி கூறுகையில், “இந்தக் கொள்ளையின் அளவு அதிர்ச்சியளிக்கிறது. ரயில்களைச் சூறையாடுபவர்கள் மீதும், திருடப்பட்ட பொருட்களைத் தெரிந்தே வாங்கிப் பணமாக்குபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் வியாழக்கிழமையன்று லாஸ் ஏஞ்சல்ஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சதித்திட்டம் தீட்டியதற்காக 5 ஆண்டுகளும், ஒவ்வொரு திருட்டு வழக்கிற்கும் தலா 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், ரயில் போக்குவரத்திற்கு எதிரான வன்முறைப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 14 மாத கால தீவிர விசாரணைக்குப் பிறகு இந்தக் கும்பல் பிடிபட்டுள்ளதை வரவேற்றுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட வழக்கறிஞர் நாதன் ஜே. ஹோச்மேன், “பொருட்களைத் திருடுபவர்களை மட்டுமின்றி, அதன் மூலம் லாபம் ஈட்டுபவர்களையும் ஒட்டுமொத்தமாக ஒடுக்குவதே எங்களது நோக்கம். விநியோகச் சங்கிலியைப் பாதுகாத்து, பொருட்கள் கள்ளச்சந்தைக்குச் செல்லாமல் உரிய இடத்திற்குச் செல்வதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மதுரை நகைக்கடை கொள்ளை: நிஷாந்திற்கு டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்; நகைகள் முழுமையாக மீட்பு



.

Previous Post

உச்ச நீதிமன்ற நீதிபதி என நினைத்து ஓவைசிக்கு சல்யூட்; உ.பி போலீஸின் குளறுபடி! நடந்தது என்ன?| UP Cops Mistake Asaduddin Owaisi For Supreme Court Judge, Give Him Guard Of Honour

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In