Last Updated:
டெல்லியில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது உறவினரை காண தனியாக பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது, இறங்க வேண்டிய இடத்திற்கு பதிலாக பாரி சவுக் பகுதியில் சிறுமி தவறுதலாக இறங்கியதாக தெரிகிறது.
கொட்டும் மழைக்கு நடுவே அந்த வழியாக சென்ற தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி சிறுமி உதவி கோரியுள்ளார். உதவுவது போல் நடித்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தினுள் சிறுமியை அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி சிறுமியை 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஷ்மீரி கேட் பகுதியில் இறக்கி விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கைது செய்த காவல் துறையினர், பேருந்தை பறிமுதல் செய்தனர்.

