Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஓடும் பேருந்தில் சில்லறை வாங்குவதில் தகராறு.. பெண் கண்டக்டருக்கு சக பயணி செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 4, 2026
in அரசியல் செய்திகள்
0
ஓடும் பேருந்தில் சில்லறை வாங்குவதில் தகராறு.. பெண் கண்டக்டருக்கு சக பயணி செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 04, 2026 5:43 PM IST

தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு முற்றி, பெண் பயணி எட்டி உதைத்ததில், கீழே விழுந்த பெண் கண்டக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 10 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய பெண் கண்டக்டரின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?.

உயிரிழந்த கண்டக்டர் பிரவளிகா
உயிரிழந்த கண்டக்டர் பிரவளிகா

தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், மணுகூரைச் சேர்ந்தவர் குண்ட்லா பிரவளிகா. 24 வயதான இவர், தெலங்கானா மாநில போக்குவரத்துக் கழகத்தின் மணுகூர் பணிமனையில், பெண் கண்டக்டராகப் பணியாற்றி வந்தார். இவரது தந்தை நாகராஜ், ஆர்டிசி நிறுவனத்தில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வாரிசு அடிப்படையில் பிரவளிகாவுக்கு கண்டக்டர் வேலை கிடைத்துள்ளது. கடந்த 10 மாதங்களாகப் பணியாற்றி வந்த அவருக்கு, இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில்தான், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அக்கோர சம்பவம் நடந்துள்ளது. வழக்கம்போல் மணுகூரில் இருந்து பத்ராசலம் செல்லும் பல்லே வெலுகு பேருந்தில், கண்டக்டராகப் பணியில் இருந்துள்ளார் பிரவளிகா. அப்போது, தனது மகனுடன் பேருந்தில் ஏறிய மௌனிகா என்ற பெண் பயணி, மகனுக்கான டிக்கெட் எடுக்க 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார். அதற்கு 10 ரூபாய் டிக்கெட் வழங்கிய பிரவளிகா, மீதித் தொகையை அப்போது சில்லறை இல்லாததால் பின்னர் பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாகத் தெரிகிறது. ஆனால் சில்லறையை உடனடியாகத் தர வேண்டும் என மௌனிகா வலியுறுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அஸ்வாபுரம் மண்டலத்தில் உள்ள மிட்டகூடெம் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, இந்த வாக்குவாதம் மேலும் தீவிரமடைந்தது. அப்போது ஆத்திரமடைந்த மௌனிகா, ஓடும் பேருந்திலிருந்து பிரவளிகாவை கீழே தள்ளி உள்ளார். இதில் சாலையில் விழுந்த பிரவளிகாவின் வலது காலின் மீது பேருந்தின் பின்பக்கச் சக்கரங்கள் ஏறி இறங்கியுள்ளன. இதனால் அவரது வலது கால் கடுமையாக நசுங்கியதுடன், இடது காலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக அவர் பத்ராசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள சாய் சஞ்சீவனி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 10 நாட்களாக உயிருக்கு போராடி வந்துள்ளார்.

இதையும் படிங்க: அன்பில் மகேஸுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு! – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஆனால், மருத்துவர்களின் தீவிர முயற்சியும் பலனளிக்காமல், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரவளிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கண்டக்டர் பிரவளிகாவின் மரணத்துக்குக் காரணமானவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக போக்குவரத்து ஊழியர்கள் வலியுறுத்திய நிலையில் சம்பவம் தொடர்பாக மௌனிகாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெறும் சில்லறை தொடர்பான வாக்குவாதம் அதனால் ஏற்பட்ட தாக்குதல் இறுதியில் 10 மாதங்களாகத்தான் பணியில் இருந்த பெண் கண்டக்டரின் உயிரையேப் பறித்திருக்கிறது. விரைவில் திருமண வாழ்க்கையைத் தொடங்கவிருந்த பிரவளிகாவின் மரணம், அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி சக ஊழியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



.

Previous Post

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…” – சு.வெங்கடேசன் youth-parliament-event-on-one-nation-one-election-cancelled-after-su-venkatesan-letter

Next Post

‘பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!’ – 20 பெர்சண்ட் கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி! |TVK MLA Kulanthai Rani regarding allegations of seeking commission for Tenders

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!’ – 20 பெர்சண்ட் கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி! |TVK MLA Kulanthai Rani regarding allegations of seeking commission for Tenders

'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' - 20 பெர்சண்ட் கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி! |TVK MLA Kulanthai Rani regarding allegations of seeking commission for Tenders

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In