Sunday, November 22, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’எஸ்.பி. வேலுமணியிடம் பேசியது என்ன?’ – செங்கோட்டையன் விளக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2026
in அரசியல் செய்திகள்
0
’எஸ்.பி. வேலுமணியிடம் பேசியது என்ன?’ – செங்கோட்டையன் விளக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் காலத்தை எதிர்த்து போரிட முடியும். முன்னாள் ஞானத்தை எதிர்த்து போரிட முடியும். ஆனால் காலத்தை எதிர்த்து போரிட முடியாது. காலம் வைக்கின்ற புள்ளியை உங்களால் அழிக்க இயலாது, இதுதான் எடப்பாடிக்கு நடைபெறுகின்ற நிகழ்வு. அ.தி.மு.க-வில் ஒவ்வொருவராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி வெளியேற்றுகிறார். எந்த ஒரு தலைமைக்கு மன்னிக்கின்ற தன்மை, பெருந்தன்மை இல்லையோ, அந்த தலைமை நீடித்து நிலைக்கின்ற வரலாறு இல்லை. அந்த வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும்” எனத் தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமணத்தில் எஸ்.பி வேலுமணியுடன் பேசியது குறித்த கேள்விக்கு, “அது உறவு முறையில் இருவருக்கும் வேண்டிய திருமணம். நானும் சென்றிருந்தேன், எஸ்.பி. வேலுமணியும் வந்திருந்தார். எங்களது கழக நிர்வாகிகளும் வந்திருந்தார்கள், எல்லோருமே அங்கு அருகாமையில் அமர்ந்து இருந்தோம். அது பொதுவாக வணக்கம் செலுத்தி விட்டு இருவரும் சும்மா அமர்ந்து கருத்துக்கள் பேசிக் கொண்டிருந்தோம், அரசியல் பேசவில்லை” என்றார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

ஜாக்பாட் அடித்து தவெக இந்த ஆட்சியில் வந்திருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பது குறித்த கேள்விக்கு, “ஜாக்பாட் அடித்தவர் யார் ? அதில் ஃபெயிலியர் ஆனவர் யார்? என்பது நாடு அறியும், தி.மு.க-வுடன் சேர்ந்து ஜாக்பாட் அடிக்க பார்த்தார். ஆனால் முகம் கிழிக்கப்பட்டு இருக்கிறது” எனத் தெரிவித்தார். அனிருத் திருமணத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை எடப்பாடி சந்தித்தது குறித்த கேள்விக்கு, ”எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை பல்வேறு நிலைகளை எடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என துடிக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் வந்த இயக்கம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் மக்கள் கேட்பது. நூற்றுக்கணக்கானவர்களை நீக்கும் அதிகாரம் இருக்கிறது என எடப்பாடி சொல்கிறார், ஆனால் எல்லோராலும் உருவாக்கப்பட்ட பொதுச் செயலாளர் என்பதை மறந்து விடுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா என்பது வேறு, எடப்பாடி பழனிசாமி என்பது வேறு , இதை அவர் புரிந்து கொண்டால் சரி” என பதிலளித்தார்.

அ.தி.மு.க-வில் 2 கோடி தொண்டர்களில் ஒருவர்தான் வேலுமணி என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு, “2 கோடி தொண்டர்கள் என சொன்னால், அதில் முக்கிய பொறுப்பாளர் தான் வேலுமணி. எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் ஆக்குவதற்கு உறுதுணையாக இருந்தார். காலம் அவருக்கு (எடப்பாடி) பதில் சொல்லும். கொங்கு மண்டலம் இப்போது யாரிடம் இருக்கின்றது என தெரிந்து கொள்ள வேண்டும். த.வெ.க தலைமையில் கொங்கு மண்டலம் இப்போது இருக்கிறது. தனித்து ஒரு இயக்கம் போட்டியிட்டு 25 சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்ற பெருமை எங்களுக்கு இருக்கிறது. கொங்கு மண்டலம் இனி எதிர்காலத்தில் வெற்றி தளபதி தலைமையில் தான் பவனி வரும். எடப்பாடி போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தேடி பார்க்க வேண்டும்” என பதிலளித்தார்.

‘தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல’ – எடப்பாடி பழனிசாமிக்கு வேலுமணி பதிலடி!



.

Previous Post

”தவெக ஆட்சி நீடிக்காது என தன் ஆசையை ஸ்டாலின் வெளிப்படுத்தி வருகிறார்”- பெ.சண்முகம்! – p.shanmugam press meet in thanajvur

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In