Last Updated:
தன்னுடைய செல்போனை பிரதமர் மோடி ஒட்டுக் கேட்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னுடைய செல்போனை பிரதமர் மோடி ஒட்டுக் கேட்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பரஸ்பரம் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ராகுலை தேசவிரோதி என பிரதமர் மோடி அண்மையில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, அவரை விவாதத்திற்கு வரும்படி சவால் விடுத்திருந்த ராகுல், தனது செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக தற்போது புகார் கூறியுள்ளார்.
தன்னைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுவதாகவும் ராகுல் கூறியுள்ளார். தன்னுடன் விவாதம் நடத்தினால் பிரதமரின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருவது உறுதி என்றும் ராகுல் கூறியுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “பாஜக, நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் தினமும் ராகுல் காந்தி மீதும் காங்கிரஸ் கட்சி மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். எந்தவொரு வலுவான அடிப்படையும் இன்றி, அவர்கள் இத்தகைய விவகாரங்களை வைத்து வீண் கூச்சலிடுகின்றனர்.
#WATCH | Delhi: AICC General Secretary KC Venugopal says, “The BJP, Narendra Modi and Amit Shah are making baseless allegations against Rahul Gandhi and the Congress party every day. Without any valid ground, they are creating a fuss over these issues. Whenever we raise a genuine issue, they make allegations without any basis…. That is why Rahul Gandhi has challenged the Prime Minister of India for a debate for the fourth time… Whenever the Leader of Opposition asks him to come for a debate, whether for five minutes, ten minutes, half an hour or one hour, why does the Prime Minister keep running away?… There is only one answer: he is scared. He is not ready to answer Rahul Gandhi’s questions…”
— ANI (@ANI) November 13, 2026
நாங்கள் ஒரு நியாயமான பிரச்சினையை எழுப்பும் போதெல்லாம், அவர்கள் எந்த ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். இதனால்தான், இந்தியப் பிரதமருடன் விவாதம் நடத்துமாறு ராகுல் காந்தி நான்காவது முறையாகச் சவால் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் விவாதத்திற்கு வருமாறு அழைக்கும் போதெல்லாம் பிரதமர் ஏன் தொடர்ந்து ஓடி ஒளிகிறார்? இதற்கு ஒரே ஒரு பதில் தான் உள்ளது: அவருக்குப் பயம். ராகுல் காந்தியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் தயாராக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

