Thursday, November 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உ.பி.யின் இருண்ட காலத்தை இளைஞர்களுக்கு நினைவூட்ட வேண்டும்: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2026
in அரசியல் செய்திகள்
0
உ.பி.யின் இருண்ட காலத்தை இளைஞர்களுக்கு நினைவூட்ட வேண்டும்: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 18, 2026 1:33 PM IST

முன்னதாக, 2024 ஆகஸ்ட் மாதம் ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வங்கதேசச் சூழலைச் சுட்டிக்காட்டி யோகி ஆதித்யநாத் இந்த முழக்கத்தை முதன்முதலில் பயன்படுத்தினார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தனது “படோங்கே தோ கடோங்கே” (Batoge To Katoge – பிரிந்தால் அழிவோம்) என்ற முழக்கம் மத ரீதியாக வாக்குகளை பிரிப்பது அல்ல என்றும், மக்களை விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வைப்பதற்கான செய்தி என்றும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கமளித்துள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற ‘ரைசிங் பாரத்’ (Rising Bharat) உச்சி மாநாட்டில் நெட்வொர்க்18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷியுடன் உரையாடிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் கூறியதாவது-

“இங்கு கேள்வி மத ரீதியில் வாக்குகளை பிரிப்பது பற்றியது அல்ல; மாறாக விழிப்புணர்வுடன் மற்றும் எச்சரிக்கையாக இருப்பது பற்றியது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் நிலவிய சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, வன்முறை மற்றும் அடையாளச் சிக்கல்களை எதிர்கொண்டவர்களுக்கு இன்று மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அருமை புரியும்.

ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரான ‘ஜென் ஸீ’ (Gen Z) மற்றும் ‘ஜென் ஆல்பா’ (Gen Alpha) ஆகியோர் மாநிலத்தின் இருண்ட காலக்கட்டத்தைப் பார்த்ததில்லை என்பதால், அவர்களுக்கு அதை நினைவூட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த காலத்தை பார்க்கும்போதுதான் நிகழ்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்றும், நிகழ்காலம் மேம்பட்டால் மட்டுமே எதிர்காலம் கௌரவமானதாக இருக்கும்.

முந்தைய அரசுகளின் தவறுகளைத் தங்கள் அரசு சரிசெய்ததாலேயே இன்று உத்தரப் பிரதேசத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது. என்று தெரிவித்தார்.

முன்னதாக, 2024 ஆகஸ்ட் மாதம் ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வங்கதேசச் சூழலைச் சுட்டிக்காட்டி யோகி ஆதித்யநாத் இந்த முழக்கத்தை முதன்முதலில் பயன்படுத்தினார். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் பிரச்சாரங்களிலும் சாதி மற்றும் பிராந்தியப் பிரிவினைகளுக்கு எதிராக இதனை அவர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சிகள் இதனை மத ரீதியில் வாக்குகளை பிரிக்கும் வியூகம் என விமர்சித்து வரும் நிலையில், சமூக ஒற்றுமைக்கான விழிப்புணர்வு செய்தியாகவே பாஜக இதனை முன்வைக்கிறது.



.

Previous Post

கரூர்: சின்ன ஆண்டாங்கோவில் அருகில் குப்பை மேடு; சுகாதாரச் சீர்கேட்டைக் கண்டுகொள்ளாத நகராட்சி | Karur: Garbage dump near Chinna Andankovil; Municipality ignores the resulting health hazard

Next Post

“தவெக-வின் 60 – 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்" – திமுக ரகுபதி சொல்லும் கணக்கு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“தமிழ்நாட்டில் பிறமொழி பேசும் பிற மாநிலத்தவர்கள், பீகார் மக்களை யாரும் அச்சுறுத்தப்படவில்லை” – திமுக அமைச்சர் ரகுபதி பேட்டி| DMK Minister Raghupathi says Governor R.N. Ravi working against Tamil Nadu

``தவெக-வின் 60 - 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்" - திமுக ரகுபதி சொல்லும் கணக்கு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In