Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"உலகில் உள்ள தெற்கு நாடுகளில் '4F'-ல் இக்கட்டான சூழல்" – ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2026
in அரசியல் செய்திகள்
0
"உலகில் உள்ள தெற்கு நாடுகளில் '4F'-ல் இக்கட்டான சூழல்" – ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.

அந்தக் கூட்டத்தில் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

நேற்று இந்தியா சார்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐ.நா.வில் உரையாற்றினார். அவர் பேசியதாவது…

வளைகுடா மோதல்

இந்த ஆண்டில், வளைகுடாப் பகுதியில் ஒரு மோதலை நாம் காண்கிறோம். இது ஏற்கெனவே சிக்கலாக உள்ள சூழலை மேலும் தீவிரமாக்குகிறது.

அங்குத் தொடரும் பகைமை குறித்து நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம்.

மத்திய கிழக்கு நாடுகள்
மத்திய கிழக்கு நாடுகள்
தேர்தல் ஆணையத்தில் நேற்று நடந்த கூட்டம்: 3 ஆணையர்களும் ‘பிரசன்ட்’; ஆனால், எந்தப் பதிலும் இல்லை!

சர்வதேச நீர்வழிப் பாதைகளைக் கடந்து செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளைக் குறிவைத்துத் தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், பதற்றத்தைக் குறைக்குமாறும், பொதுமக்களின் பாதுகாப்பையும் ஆற்றல் மற்றும் வணிகத்தின் தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்யுமாறும் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

ரஷ்யா – உக்ரைன் போர்

தற்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள உக்ரைன் மோதலும் சமமான கவலையை அளிக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டது போல, முடிவில்லாத போர் இப்போது போரின் முடிவுக்கு வழிவிட வேண்டும்.

அமைதியைக் கொண்டுவருவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது.

உலகம் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் ஆளாகிக் கொண்டிருந்தால், நாம் உண்மையில் ஒரு பேராபத்தின் விளிம்பில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம்மைக் கீழே தள்ளுவதற்கு இன்னும் ஒரே ஒரு அடிதான் தேவை. எனவே, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய தன்மை ஆகியவற்றை வலுப்படுத்துவது அவசியமாகிறது.

உலகளாவிய தெற்கு நாடுகளில் இக்கட்டான நிலை மிகவும் தீவிரமாக உள்ளது. அது உணவு, எரிபொருள், உரம் மற்றும் நிதி ஆகிய 4F (food, fuel, fertilizer, finance) பாதுகாப்புச் சிக்கலை எதிர்கொள்கிறது.

சூப்பர் எல் நினோவின் தாக்கம், உரப் பற்றாக்குறை மற்றும் தானியங்களின் நகர்வுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் — இவை அனைத்தும் அச்சமளிப்பதாக உள்ளன.

மேலும், நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றமும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

விக்கற விலைக்கு தங்கத்தில் முதலீடு செய்ய முடியவில்லை தானே; ‘இந்த’ உலோகத்துல பார்வையை திருப்புங்க!

பயங்கரவாதம்

அமைதிக்கு ஒரு நிலையான அச்சுறுத்தலாக விளங்குவது பயங்கரவாதத்தின் கொடூரமாகும்.

எல்லை தாண்டிய நோக்கத்துடன் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதமாக இது இருப்பது உலகளாவிய ஒழுங்கிற்கு விடுக்கப்படும் நேரடி சவாலாகும்.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் அரசாங்கங்கள் பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான நமது சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையில் எந்தத் தளர்வும் இருக்கக் கூடாது.

குறிப்பாக அதன் நிதி அம்சங்கள் அம்பலப்படுத்தப்பட்டு முறியடிக்கப்பட வேண்டும்.

ஏ.ஐ.

தற்போதைய உலகளாவிய உரையாடல்களில் மையமாக இருக்கும் ஒரு விஷயம் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகும்.

செயற்கை நுண்ணறிவை மனித அதிகாரம், பொருளாதாரச் செழிப்பு மற்றும் மக்கள் தொகை அளவிலான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு உருமாற்றக் காரணியாக நாங்கள் பார்க்கிறோம்.”



.

Previous Post

அமைதியை பலவீனமாக கருதக்கூடாது.. அச்சுறுத்தல் வந்தால் இந்தியா பதிலடி கொடுக்கும்! ராஜ்நாத் சிங் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஜாமீன் பெற நீதிபதி போல் நடித்த வழக்கு… சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜாமீன் பெற நீதிபதி போல் நடித்த வழக்கு… சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை! | India News (இந்தியா செய்திகள்)

ஜாமீன் பெற நீதிபதி போல் நடித்த வழக்கு... சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In