Last Updated:
கேரளாவைச் சேர்ந்த மாயா என்ற குட்டி யானை உயிருக்கு போராடி வந்த நிலையில், அனந்த் அம்பானியின் வந்தாரா வன விலங்கு காப்பகத்துக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மாயா என்ற குட்டி யானை உயிருக்கு போராடி வந்த நிலையில், அனந்த் அம்பானியின் வந்தாரா வன விலங்கு காப்பகத்துக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
கேரளாவின் வனப்பகுதியில் வாழ்ந்து வந்தது மாயா என்ற 18 மாதங்களான குட்டி யானை. கடந்த 2026 ஜூலை மாதம் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயா தவறி விழுந்து காயமடைந்தது. இதற்காக பிசியோதெரபி சிகிச்சை, உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. இருப்பினும், அதன் எலும்புகள் தொடர்ந்து பலவீனமடைந்தன.
அக்டோபர் மாத இறுதியில் மாயாவால் எழுந்து நிற்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. அதன் இரண்டு முன்கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், மார்பில் தொற்று மற்றும் நீண்ட நேரம் படுத்திருந்ததால் உடலில் அழுத்தப் புண்களும் உருவாகின. இதனால் அதன் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. மாயாவுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் நோக்கில் கேரள தலைமை வனவிலங்கு காப்பாளர் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றார்.
இறுதியில், அனந்த் அம்பானியின் வந்தாரா வன விலங்கு காப்பகத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்காக உயிர்காக்கும் மருத்துவ வசதிகளுடன் கூடிய விமானத்தில் மாயா வந்தாந்திராவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. வந்தாந்திராவின் மூன்று யானைகள் மருத்துவர்கள், உதவியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் உடன் செல்கின்றனர்.

