Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உயர்மட்ட குழு கலைப்பு: “தவெக அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது”- திமுக அறிக்கை | dmk slams tvk government for Discontinues High-Level Committee On Union-State Relations |

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2026
in அரசியல் செய்திகள்
0
உயர்மட்ட குழு கலைப்பு: “தவெக அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது”- திமுக அறிக்கை | dmk slams tvk government for Discontinues High-Level Committee On Union-State Relations |
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த திமுக ஆட்சியில் மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு கலைத்திருக்கிறது.

இதற்கு திமுக கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், ” தி.மு.க. மீதுள்ள வன்மத்தின் காரணமாக மாநில உரிமைகளைக் காவு கொடுக்கும் த.வெ.க. அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது

ஒன்றிய – மாநில உறவுகளைக் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவைக் கலைத்து மாநில உரிமைகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய்

எதையும் உருவாக்கும் திறனும் இன்றி, அடுத்தவர் உருவாக்கியதைப் பேணும் முதிர்ச்சியும் இன்றி இழிவான அரசியலில் இறங்கியுள்ளது மூடர்கூடத் த.வெ.க. அரசு!

திராவிட மாடல் அரசில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் மிக நீண்ட அனுபவமும், ஆராயும் பொருண்மையில் ஆழ்ந்த அறிவும் மிக்க வல்லுநர்கள். அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் என்ற பெயரைத் தங்கள் பணிக்காலத்தில் ஈட்டியவர்கள்.

இவர்களால் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முதல் பாகம் இந்தியா முழுவதும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சி எனப் பல தலைவர்களும் அதனைப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா முதலியோர் இந்த அறிக்கையைப் பாராட்டி, அன்றைய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதங்களை மூடர்கூடத் த.வெ.க. அரசு படித்துப் பார்க்க வேண்டும்.

கழக அரசில் அமைத்த குழு உறுப்பினர்களின் நேர்மையிலும், அவர்களது அறிக்கையின் தரத்திலும் என்ன முயன்றாலும் குறைகாணவோ குற்றம் சாட்டவோ முடியாது என்பதால் மிக அற்பமான ஒரு காரணத்தைக் கூறி, குழுவைக் கலைத்திருக்கிறார்கள்.



.

Previous Post

பொன்னமராவதி: தேங்கும் கழிவுநீர்; நோய் பரவல் அபாயத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்! – தீர்வு காணப்படுமா?| Ponnamaravathi Bus Stand: Stagnant Sewage Raises Disease Fears

Next Post

எல்லாக் குற்றங்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா? – சட்டம் சொல்வது என்ன? – 12| Can You Get Bail for Every Crime? What the Law Says

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எல்லாக் குற்றங்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா? – சட்டம் சொல்வது என்ன? – 12| Can You Get Bail for Every Crime? What the Law Says

எல்லாக் குற்றங்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா? - சட்டம் சொல்வது என்ன? - 12| Can You Get Bail for Every Crime? What the Law Says

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In