Last Updated:
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்களை ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்கள் மட்டுமே தருவதற்கு சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. போட்டியிடும் இடங்கள் தொடர்பாக இரு கட்சிகள் இடையே 2 நாட்களாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்களை தருவதற்கு சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளது.
காங்கிரஸ் கடந்த முறை வென்ற இரு தொகுதிகள், 2வது இடம் பெற்ற 4 தொகுதிகள் உள்பட 26 தொகுதிகள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ், இடங்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.
இதனிடையே லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தலில் வெற்றி பெறவே கூட்டணி அமைக்கப்படுவதாகவும், எதிரிகளை வீழ்த்தும் வகையில் கூட்டணி கட்சிகள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றார். 403 எம்எல்ஏ-க்களை கொண்டுள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி 125 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
இதற்கிடையே, 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் விவரங்களை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டது. ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும் நிலையில் முதல் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

