நவம்பர் 3-ம் தேதி மிட் டேர்ம் தேர்தல் முடிந்து, அந்தத் தேர்தலின் முடிவுகளும் வெளியாகிவிட்டன. ஆனால், இன்னமும் ஈரான் போரில் அடுத்தக்கட்டத்தை முன்னெடுக்கவில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இதற்குத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி சந்தித்த பின்னடைவே முக்கிய காரணம்.
ஈரான் தற்போது தன்னுடைய நிலைபாட்டை வெளிப்படுத்தியுள்ளது…
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி:
“அமெரிக்கத் தரப்பு செய்ய வேண்டியவற்றைச் சரியாகச் செய்தால், ஹார்முஸ் நீர்ச்சந்தியிலும் பிராந்தியத்திலும் மிகக் குறுகிய காலத்திற்குள் பாதுகாப்பை மீண்டும் நிலைநாட்ட முடியும்.

இதில் உள்ள சிக்கல்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால், ஈரானுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம் என்பதை மட்டுமே நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம்.
ஈரான் மக்களின் உரிமைகள் என்னென்ன என்பது எங்களுக்கு நன்கு தெரியும்; இந்த விஷயத்தில் ஈரான் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.”
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுத் தலைவர் இப்ராஹிம் அஸிஸி:
“நாங்கள் உச்சகட்டத் தயார்நிலையில் இருக்கிறோம்; எதிரியை வருந்தச் செய்யும் அளவிற்கான திறனை எங்களது படைகள் எட்டியுள்ளன.”
இந்தப் பேச்சுகளை வைத்துப் பார்க்கும்போது, ஈரான் சமாதானத்திற்கும் தயாராக உள்ளது… போருக்கும் தயாராக உள்ளது.
