Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இந்த மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு, செயலிழப்பு கூட ஏற்படலாம்… கவனம் தேவை” | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2026
in அரசியல் செய்திகள்
0
“இந்த மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு, செயலிழப்பு கூட ஏற்படலாம்… கவனம் தேவை” | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 24, 2026 1:30 PM IST

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டின் இந்த அறிவுரை, பொதுமக்களுக்கு மட்டுமன்றி மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருந்து விநியோகஸ்தர்களுக்கும் பொருந்தும்.

மாத்திரைகள் (கோப்புப் படம்)
மாத்திரைகள் (கோப்புப் படம்)

எந்தவொரு மருந்து, மாத்திரைகளையும் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அப்படி உட்கொள்வது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிப்பதுண்டு. அந்த வகையில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒரு எச்சரிக்கையை தற்போது தெரிவித்துள்ளது.

அதன்படி வலி நிவாரணிகள், குறிப்பாக NSAIDs (Non-Steroidal Anti-Inflammatory Drugs – ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்), மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி தேவையில்லாமல், அதிக அளவில் அல்லது நீண்ட காலம் பயன்படுத்துவதால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம் என்று CDSCO எச்சரித்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சனை அல்லது சிறுநீரக செயலிழப்புக்கான ஆபத்து உள்ளவர்கள் இவ்வகை மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெஞ்செரிச்சல் Vs அஜீரணம்… என்ன வித்தியாசம்? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

இந்த மாத்திரைகள் எப்படி சிறுநீரகத்தை பாதிக்கின்றன? இவை பொதுவாக வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில சூழ்நிலைகளில் இவை சிறுநீரகங்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை பாதித்து, சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்பாட்டை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்துவது, அதிக அளவில் எடுத்துக்கொள்வது, உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும் போது பயன்படுத்துவது, ஏற்கனவே சிறுநீரக நோய் இருப்பது, உயர் ரத்த அழுத்தம் அல்லது இதய நோய் இருப்பது, வேறு சில மருந்துகளுடன் சேர்த்து பயன்படுத்துவது போன்ற சூழ்நிலைகளில் ஆபத்து அதிகரிக்கலாம். மருத்துவ பரிந்துரையின் போது அவர்கள் இதில் கூடுதல் கவனம் எடுப்பதால் எச்சரிக்கையோடு இருக்கலாம்.

The Central Drugs Standard Control Organisation (CDSCO) has issued an advisory circular addressed to healthcare professionals, pharmacies, retailers, distributors, and hospitals regarding the indiscriminate use of painkillers, specifically Non-Steroidal Anti-Inflammatory Drugs… pic.twitter.com/aXQIO1NTbW


— ANI (@ANI) September 22, 2026

ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஏன் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்? இந்த மாத்திரைகள் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள். சாதாரண வைரஸ் சளி, காய்ச்சல் போன்ற பெரும்பாலானவற்றுக்கு ஆன்டிபயாட்டிக் தேவையில்லை. அப்படியான நேரத்தில் தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொள்வதால் இரண்டு முக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். அவை, சிறுநீரக பாதிப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பிரச்சனை. எனவே, ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை சுயமாகவோ, கடந்த முறை பயன்படுத்திய அதே ஆண்டிபயாடிக்கை மீண்டும் ஒருமுறை தானாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டின் இந்த அறிவுரை, பொதுமக்களுக்கு மட்டும் விடுக்கப்பட்ட அறிவுரை அல்ல. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருந்து விநியோகஸ்தர்களுக்கும் பொருந்தும்.



.

Previous Post

திருப்பதி கருட சேவை: IRCTC பேக்கேஜ் புக் செய்யும் முன் இதை கவனியுங்கள்! | IRCTC Tirupati Package Booking Guide 2026: Check Garuda Seva Darshan Tickets & Hidden Costs

Next Post

நியூ ஜல்பைகுரி – பாட்னா வந்தே பாரத் இரயில் பாதையில் மாற்றம்! இன்று பயணம் செய்பவர்கள் இதை கவனியுங்கள் | New Jalpaiguri-Patna Vande Bharat Express Route Diversion: Important Update For Passengers (2026)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நியூ ஜல்பைகுரி – பாட்னா வந்தே பாரத் இரயில் பாதையில் மாற்றம்! இன்று பயணம் செய்பவர்கள் இதை கவனியுங்கள் | New Jalpaiguri-Patna Vande Bharat Express Route Diversion: Important Update For Passengers (2026)

நியூ ஜல்பைகுரி - பாட்னா வந்தே பாரத் இரயில் பாதையில் மாற்றம்! இன்று பயணம் செய்பவர்கள் இதை கவனியுங்கள் | New Jalpaiguri-Patna Vande Bharat Express Route Diversion: Important Update For Passengers (2026)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In