Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இந்த அரசு இன்னும் ஒரு ஆண்டு கூட நீடிக்காது” – பஞ்சாப்பில் ராகுல் காந்தி பரபரப்பு கருத்து | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 4, 2026
in அரசியல் செய்திகள்
0
“இந்த அரசு இன்னும் ஒரு ஆண்டு கூட நீடிக்காது” – பஞ்சாப்பில் ராகுல் காந்தி பரபரப்பு கருத்து | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 04, 2026 6:43 PM IST

மத்திய பாஜக அரசு இன்னும் ஒரு ஆண்டு கூட நீடிக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News18
News18

பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் 2027ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸும், பாஜகவும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இதில் குறிப்பாக பஞ்சாப்பில் போதை பொருள் கலாச்சாரம் பெரிய அளவில் இருப்பதாகவும், அதனை ஒழிப்போம் என்பதையே காங்கிரஸும், பாஜகவும் முன்னெடுத்துவருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்தும், சத்தீஸ்கரில் இருந்து நக்ஸலிசத்தை ஒழிப்போம் என அறிவித்தோம். அதன்படி அதனை செய்துமுடித்தோம். அதேபோல், 2029ஆம் ஆண்டு டிசம்பர் 31க்குள் நாட்டில் இருந்து போதை பொருளை ஒழிப்போம் என உறுதி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்திலும் போதை பொருள் புழக்கம் மற்றும் ஒழிப்பு குறித்து பாஜக தொடர்ந்து பேசி வருகிறது. தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில், காங்கிரஸ் சார்பில் இன்று பஞ்சாப் மாநிலம், சங்கரூர் பகுதியில், ‘நீதி பேரணி’ எனும் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.

#WATCH | Punjab | Addressing ‘Insaaf Rally’ in Sangrur, Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, “What timeline did they (Union HM Amit Shah) set for the drug issue?… Within three years? In three years, Amit Shah won’t even be the Home Minister anymore… My assessment is that this govt won’t even last a year. Anyway, Amit Shah claims he will eradicate the drug problem in three years…”


He adds, “People here need a govt that works for Punjab. When the Congress party comes to power, the govt of Punjab cannot be run from Delhi. Our party runs the Punjab government from within Punjab. Our Chief Minister is truly the Chief Minister of Punjab. Punjab is not run by India’s Home Minister, nor is it run by an ex-Delhi Chief Minister… Right now, however, the reins are held half by Amit Shah and half by Kejriwal, while Bhagwant Mann just sits there. Punjab is being governed from Delhi.”

— ANI (@ANI) November 4, 2026

இந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “போதைப்பொருள் விவகாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் மூன்று ஆண்டுகள் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார். மூன்று ஆண்டுகள் கழித்து அமித் ஷா உள்துறை அமைச்சராகக் கூட இருக்க மாட்டார். எனது கணிப்புப்படி, இந்த அரசாங்கம் ஓராண்டு கூட நீடிக்காது. எப்படியிருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்குள் போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துவிடுவேன் என்று அமித் ஷா கூறுகிறார்.

இங்குள்ள மக்களுக்கு பஞ்சாபிற்காக உழைக்கும் ஒரு அரசாங்கம் தேவை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்போது, ​​பஞ்சாப் அரசாங்கம் டெல்லியிலிருந்து இயக்கப்படாது. எங்கள் கட்சி பஞ்சாப் அரசாங்கத்தை பஞ்சாபிலிருந்தே நடத்துகிறது. எங்கள் முதலமைச்சர் உண்மையான அர்த்தத்தில் பஞ்சாபின் முதலமைச்சர் ஆவார்.

பஞ்சாபை இந்தியாவின் உள்துறை அமைச்சரோ அல்லது டெல்லியின் முன்னாள் முதலமைச்சரோ இயக்குவதில்லை. ஆனால் தற்போது, ​​அதிகாரக் கடிவாளம் பாதியளவு அமித் ஷாவின் கையிலும், பாதியளவு கெஜ்ரிவாலின் கையிலும் உள்ளது. பகவந்த் மான் வெறும் பார்வையாளராக மட்டுமே அமர்ந்திருக்கிறார். பஞ்சாப் டெல்லியிலிருந்து ஆளப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.



.

Previous Post

'உங்களைப் போலவே எங்கள் எம்எல்ஏ-வும் குழந்தையுடன் பணியாற்றுகிறார்!' – ஜெர்மன் தொழிலதிபரிடம் கீர்த்தனா

Next Post

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…” – சு.வெங்கடேசன் youth-parliament-event-on-one-nation-one-election-cancelled-after-su-venkatesan-letter

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…” – சு.வெங்கடேசன் youth-parliament-event-on-one-nation-one-election-cancelled-after-su-venkatesan-letter

``ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு..." - சு.வெங்கடேசன் youth-parliament-event-on-one-nation-one-election-cancelled-after-su-venkatesan-letter

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In