Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியா கூட்டணி கட்சிகளின் போட்டி நாடாளுமன்றம்… என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2026
in அரசியல் செய்திகள்
0
இந்தியா கூட்டணி கட்சிகளின் போட்டி நாடாளுமன்றம்… என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 01, 2026 1:48 PM IST

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.

News18
News18

2024 மக்களவை தேர்தல் சட்டவிரோதமாக நடந்த தேர்தல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் போட்டி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய நிலையில் அதில் என்ன நடந்தது?

எஸ்ஐஆர் நடவடிக்கைகளை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் போட்டி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் திருமாவளவன் உள்பட 21 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டி நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எஸ்ஐஆர் விவகாரத்தில் தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் தலைமை தேர்தல் ஆணையர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

தீர்மானத்தை ஆதரித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், எஸ்ஐஆர் மூலம் 13 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் சட்டவிரோதமாக நடந்ததாகவும், எஸ்ஐஆர் பெயரில் இந்திய ஜனநாயகத்திற்கு சேதம் விளைவித்தவர்களை தப்பிக்க விடமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, ஞானேஷ்குமார் ஏன் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கூறி கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டன. எஸ்ஐஆர் நடைமுறையில் நாடு முழுவதும் சுமார் 13 கோடியே 30 லட்சம் வாக்காளர்களை தலைமை தேர்தல் ஆணையர் வேண்டுமென்றே நீக்கியது தேச விரோத செயல் என்றும் நாடாளுமன்றத்தின் மேற்பார்வையோ, பரிந்துரையோ இன்றி படிவம் 6ஐ ஞானேஷ் குமார் தன்னிச்சையாக திருத்தி பாஜகவுக்கு துணை போனதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ERONET மற்றும் ECINET மென்பொருளை சட்டவிரோதமாக பயன்படுத்தி பொது மக்களின் வாக்குரிமையை தலைமை தேர்தல் ஆணையர் பறித்தது தேச விரோத செயல் என்றும், சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் நடைபெற வேண்டிய தேர்தலையும், அரசியலமைப்பு சட்டத்தை காக்கும் பொறுப்பையும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புறக்கணித்ததாகவும் மொத்தம் 6 குற்றச்சாடுகள் முன்வைக்கப்பட்டு அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் போட்டி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று டெல்லி சலோ பேரணி நடைபெறுகிறது.



.

Previous Post

“எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்.!” – மு.க.ஸ்டாலின் பகிர்வு | dmk stalin praises duraimurugan in his family function

Next Post

புதுக்கோட்டை: 6 மாதம் கிடப்பில்; சி.எம் விசிட்டால் 2 நாளில் அவசரமாக சாலை பணி; கேள்விக்குறியான தரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுக்கோட்டை: 6 மாதம் கிடப்பில்; சி.எம் விசிட்டால் 2 நாளில் அவசரமாக சாலை பணி; கேள்விக்குறியான தரம்!

புதுக்கோட்டை: 6 மாதம் கிடப்பில்; சி.எம் விசிட்டால் 2 நாளில் அவசரமாக சாலை பணி; கேள்விக்குறியான தரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In