Last Updated:
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 8 சதவிகிதமாக அதிகரிப்பு. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியிலும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்…
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவிகிதமாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. இந்த வளர்ச்சியை மாபெரும் சாதனை என கூறியுள்ள பிரதமர் மோடி, உலக அளவில் நிலவிய நிச்சயமற்ற நிலை மற்றும் எண்ணெய் விலை மற்றும் விநியோகச் சங்கிலி சிக்கல்களையும் தாண்டி இந்தியா இந்த வளர்ச்சியை எட்ட மக்களின் கூட்டு வலிமையே காரணம் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எதிர்மறையான கணிப்புகளை மட்டுமே கூறி பீதியை கிளப்பியோர் தற்போது வெட்கப்பட்டு போயியுள்ளதாகவும் பிரதமர் சாடியுள்ளார்.

