கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில், நள்ளிரவில் ஆய்வுக்கு சென்று பெண் காவலரிடம் மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்து காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை என அதிமுக எம்.பி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
“இந்த போலீஸ் ஆய்வு வீடியோ போலியா? உண்மையா? உள்துறை முதலமைச்சர் வசம் இருக்கும்போது, கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் காந்திராஜ் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அதுவும் நள்ளிரவில் பெண் காவலர்களை அழைத்து நாடக ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன?
