Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆயுஷ்மான் திட்டத்தில் வந்த முக்கிய மாற்றம்.. 112 நோய்களுக்கான சிகிச்சைகள் இனி தனியார் மருத்துவமனைகளில் கிடைக்காது.! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2026
in அரசியல் செய்திகள்
0
ஆயுஷ்மான் திட்டத்தில் வந்த முக்கிய மாற்றம்.. 112 நோய்களுக்கான சிகிச்சைகள் இனி தனியார் மருத்துவமனைகளில் கிடைக்காது.! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த 2018-ம் ஆண்டு, செப்டம்பர் 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால், ஆயுஷ்​மான் பாரத் மருத்​துவ காப்​பீடு திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டில் குறைந்த வருவாய் உள்ள 40% குடும்பங்களுக்கு, குறிப்பாக ஏழைகள், சமூகத்தில் நலிவடைந்த மக்கள் உள்ளிட்டோருக்கு மருத்துவ சிகிச்சை, 2-ம் கட்ட சிகிச்சை, அறுவை சிக்சை செய்ய இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதில் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் இந்த அட்டையை வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ், 112 குறிப்பிட்ட மருத்துவ நிலைகளுக்கான சிகிச்சைகளை இனி தனியார் மருத்துவமனைகளில் பெற முடியாது, இந்த 112 மருத்துவ நிலைகளுக்கான சிகிச்சைத் தொகுப்புகளை (treatment packages) அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே என ஒதுக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகளுக்கு இது ஒரு பின்னடைவாக அமையக்கூடும்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ஏற்கனவே 23 மருத்துவ நிலைகளுக்கான சிகிச்சைத் தொகுப்புகள் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே என ஒதுக்கப்பட்டுள்ளன; அதாவது, இவற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது. தற்போது இந்த பட்டியல் விரிவுபடுத்தப்பட்டு, கூடுதலாக 89 சிகிச்சைத் தொகுப்புகளை அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்குவதற்கான முன்மொழிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய பட்டியல், டிசம்பர் 1, 2026 முதல் ‘பரிவர்த்தனை மேலாண்மை அமைப்பில்’ (Transaction Management System – TMS) நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்தந்த மாநில அரசுகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையைக் கொண்டிருக்கும்.

இந்த 112 சிகிச்சைத் தொகுப்புகள், பகல்நேர சிகிச்சை நடைமுறைகள் (day-care procedures) முதல் சிக்கலான அறுவை சிகிச்சைகள் வரை பல்வேறு மருத்துவச் சேவைகளை உள்ளடக்கியுள்ளன. மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகள், காது-மூக்கு-தொண்டை (ENT) மற்றும் கண் மருத்துவம், மனநல மருத்துவம், பொது மருத்துவம் மற்றும் எலும்பியல் தொடர்பான சிகிச்சைகள் இனி அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும்.

முன்பு, நோயாளிகள் தங்கள் ஆயுஷ்மான் அட்டையைப் பயன்படுத்தி, உயர் அபாயத்துடன் கூடிய பிரசவங்கள், பயாப்ஸி, கருப்பை அறுவை சிகிச்சைகள், மதுப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் நோய்கள், சிக்குன்குனியா, வயிற்றுப்போக்கு, கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, ஹெபடைடிஸ், மனநிலை கோளாறுகள், மன அழுத்த மேலாண்மை, மலேரியா, நீர்க்கட்டி மற்றும் ஃபிஸ்துலா (fistula) சிகிச்சைகள், கருக்கலைப்பு (MTP), கடுமையான இரத்த சோகை, கணைய அழற்சி, கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள், கண்புரை, மனநல/நடத்தை சார்ந்த சிக்கல்கள், மனநல கோளாறுகள், பதட்டம், கவனக்குறைவு மற்றும் மிகைச்செயல்பாட்டுக் கோளாறு (ADHD), கிளௌகோமா பரிசோதனை மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடிந்தது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, இவற்றுக்கான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே என மட்டுப்படுத்தப்படும். இது ஒரு பெரும் சவாலாகவும் அமைகிறது.

இந்தத் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் உள்ள ஒரு முக்கிய தடையாக, அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளும், அங்கு வரும் நோயாளிகளின் பெருமளவிலான வருகையும் உள்ளன. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மேம்பட்ட சிகிச்சை வசதிகள், சிறப்பு உபகரணங்கள், நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை. இதைக் கருத்தில் கொள்ளும்போது, ​​ஆயுஷ்மான் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்குப் பிறகு, மக்கள் எவ்வாறு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெற முடியும் என்ற கேள்வி எழுகிறது.



.

Previous Post

தமிழ்நாடு vs ஆந்திரா: 'முதலீட்டை பொறுத்தவரை ஸ்ரேட்டஜி ரொம்ப முக்கியம்'- சந்திரபாபு நாயுடு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In