Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமெரிக்கத் தடைகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு ஈரான் புதிய ஆஃபர்.. இறுதி முடிவு எடுக்கும் மத்திய அரசு.. | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2026
in அரசியல் செய்திகள்
0
அமெரிக்கத் தடைகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு ஈரான் புதிய ஆஃபர்.. இறுதி முடிவு எடுக்கும் மத்திய அரசு.. | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 03, 2026 2:47 PM IST

ஈரானுடனான பல நூறாண்டு கால நட்புறவைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவே இதில் திருப்புமுனையாக அமையும்.

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர்
பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல் மற்றும் பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் ஈரான் ஒரு முக்கிய அதிகாரப்பூர்வ முன்மொழிவை (Official Proposal) இந்திய அரசிடம் வழங்கியுள்ளது. டெஹ்ரான் மற்றும் புதுடெல்லி இடையே புதிய ஈரானிய ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலமாக நேரடி விமான சேவையை உடனடியாகத் தொடங்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா விதித்த கடுமையான தடைகள் காரணமாக, ஈரானின் முதன்மை விமான நிறுவனமான ‘மஹான் ஏர்’ (Mahan Air) சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. ஜூலை 30 அன்று, மஹான் ஏர் நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி இந்தியாவில் உள்ள ‘ஸ்கைஸ் டிராவல்ஸ்’ உள்ளிட்ட 6 அமைப்புகள் மீது அமெரிக்கா தடை விதித்தது. இதன்காரணமாக, மஹான் ஏர் நிறுவனத்தின் பயணிகள் சேவையோடு சேர்த்து, அண்மையில் அதன் சரக்கு (Cargo) விமான சேவைகளும் இந்தியாவில் முழுமையாக நிறுத்தப்பட்டன.

இந்தியாவிற்கும் ஈரானிற்கும் இடையே ஆண்டுதோறும் சுமார் 50,000 பயணிகள் பயணம் செய்கின்றனர். இதில் இந்தியாவில் இருந்து 25,000 முதல் 30,000 பேரும், ஈரானில் இருந்து 20,000 முதல் 25,000 பேரும் பயணிக்கின்றனர். நேரடி விமானங்கள் இல்லாததால் மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வழிபாட்டிற்காகச் செல்லும் ஆன்மீகச் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது பயணிகள் மூன்றாவது நாடுகள் வழியாக அதிகக் கட்டணம் செலுத்தி, நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

புதிய ஏர்லைன்ஸ் சேவை தொடங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகள் அதிகரிக்கும். மேலும், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பும் ஈரானிய சுற்றுலாப் பயணிகளுக்கு புதுடெல்லி ஒரு முக்கிய இடைநிறுத்தப் பகுதியாக (Stopover) மாறும்.

ஒருபுறம் அமெரிக்காவின் தடைகள் மற்றும் சர்வதேச அழுத்தங்கள் இருந்தாலும், மறுபுறம் ஈரானுடனான பல நூறாண்டு கால நட்புறவைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவே இதில் திருப்புமுனையாக அமையும்.



.

Previous Post

வாரணாசி கங்கை வெள்ளம்: இன்றைய ஆரத்தி, படகு சவாரி மற்றும் பாதுகாப்பான தரிசன வழிகாட்டி! | Varanasi Ganga Aarti Update: Ghat Safety, Boat Ride Status, And Temple Darshan Guide For Sept 2026

Next Post

நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்! பயணிகள் தவிப்பு, மாற்று வழி என்ன தெரியுமா? | Ranchi-Varanasi Vande Bharat Express Stuck Near DDU Junction: Passenger Guide And Refund Rules 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்! பயணிகள் தவிப்பு, மாற்று வழி என்ன தெரியுமா? | Ranchi-Varanasi Vande Bharat Express Stuck Near DDU Junction: Passenger Guide And Refund Rules 2026

நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்! பயணிகள் தவிப்பு, மாற்று வழி என்ன தெரியுமா? | Ranchi-Varanasi Vande Bharat Express Stuck Near DDU Junction: Passenger Guide And Refund Rules 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In