Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது விஜிலன்ஸ் வழக்குப்பதிவு.. களத்தில் இறங்கிய அறப்போர் இயக்கம்..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
September 21, 2024
in Default
1
மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது விஜிலன்ஸ்  வழக்குப்பதிவு.. களத்தில் இறங்கிய அறப்போர் இயக்கம்..
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.வைத்திலிங்கம். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளது.

ஆனால், அந்த திட்டத்திற்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்காத நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு திடீரென அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி வழங்குவதற்கு பெருமளவு லஞ்சம், அப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஆ.வைத்திலிங்கத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழங்கிய புகார் மனுவில், “ஸ்ரீராம் நிறுவனம் குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்காக ஆ.வைத்திலிங்கத்திற்கு ரூ.27.9 கோடி லஞ்சமாக வழங்கியுள்ளது. லஞ்ச பணம் பாரத் கோல் கெமிக்கல் பிரைவெட் லிமிடெட் மூலம் ஆ.வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு ஆகியோர் இயக்குநர்களாக இருந்த முத்தம்மாள் எஸ்டேட் பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டதுபோல காட்டப்பட்டுள்ளது.

ஆனால், முத்தம்மாள் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதாக கூறப்படும் பாரத் நிறுவனம், தாங்கள் வாங்கிய ரூ.280 கோடி கடனை திருப்பி கொடுக்க முடியாமல், தங்களுடைய சொத்துக்களை விற்று அடைப்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மேலும், வேறு சில தனியார் நிறுவனங்கள் வணிகத்துக்காக பாரத் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதுபோல ரூ.27.9 கோடி கொண்டு வரப்பட்டுள்ளது. கடன் பெற்றதாக கூறப்படும் முத்தம்மாள் நிறுவனம் 2014ஆம் ஆண்டில் இருந்து ஒரு ரூபாய் கூட வணிகம் செய்யவில்லை என வருமானவரித்துறையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

உண்மை நிலைமை இப்படி இருக்கையில், தங்களுக்கு கிடைத்த லஞ்சப் பணத்தை பயன்படுத்தி வைத்திலிங்கமும், அவரது மகன்களும் திருச்சியில் உள்ள பாப்பகுறிச்சியில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர்.

இதேபோல, லஞ்சப் பணம் கிடைத்த காலகட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அடுத்தடுத்து வாங்கியுள்ளனர். எனவே, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அறப்போர் இயக்கத்தின் புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் அமைச்சர் ஆ.வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு, அவர்களது முத்தம்மாள் நிறுவனம், ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், பாரத் நிறுவனம் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக வைத்திலிங்கம் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

“எங்க நெய் சுத்தமானது” – திருப்பதி லட்டுக்கு நெய் கொடுத்த தமிழ்நாடு நிறுவனம் விளக்கம்! 

Next Post

திருப்பதி லட்டில் மாடு, பன்றியின் கொழுப்பு கலப்பு : ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் – ராகுல்காந்தி வேதனை!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
திருப்பதி லட்டில் மாடு, பன்றியின் கொழுப்பு கலப்பு : ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் – ராகுல்காந்தி வேதனை!

திருப்பதி லட்டில் மாடு, பன்றியின் கொழுப்பு கலப்பு : ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் - ராகுல்காந்தி வேதனை!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    👌😄👌👌👌😄😄👌👌👌

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In