‘ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து விஷமிகளையும் அவர்களை கூலிக்காக தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் சட்டத்தின் முன் நீதிமன்றத்தில் நிறுத்துவேன்’ என்று SP வரும் கூறியுள்ளார்.
இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும். இதில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தருவது உறுதி என்று அவர் எச்சரித்துள்ளார். அவதூறு பரப்பும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். ஆபாச பதிவுகளை நீக்காத, மன்னிப்புக் கேட்காத கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது; எவ்வித சமரசமும் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
X தளத்தில் இருந்து நானும் என் மனைவி வந்திதா பாண்டேவும் தற்காலிமாக விலக முடிவெடுத்துள்ளோம் – ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய 51 கணக்குளை வெளியிட்டு திருச்சி SP வருண்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

