Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு பதவி உயர்வா? – ஆட்சியர் விளக்கம்!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
September 21, 2024
in Default
1
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு பதவி உயர்வா? – ஆட்சியர் விளக்கம்!
29
SHARES
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலர் மு.கண்ணனுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று (செப்டம்பர் 20) விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு அளிக்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

பேஜர் வெடிப்புக்கு பின்னணியில் வயநாட்டுக்காரர்? அதிர வைக்கும் தகவல்கள்!

Next Post

மழைநீர் வடிகால் டெண்டர் ஒதுக்கீடு ஊழல்: வேலுமணி மீது வழக்கு…எடப்பாடி காட்டம்!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
மழைநீர் வடிகால் டெண்டர் ஒதுக்கீடு ஊழல்: வேலுமணி மீது வழக்கு…எடப்பாடி காட்டம்!

மழைநீர் வடிகால் டெண்டர் ஒதுக்கீடு ஊழல்: வேலுமணி மீது வழக்கு…எடப்பாடி காட்டம்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ஏதோ கலெக்டர் சொல்றாரு. நாங்களும் கேட்டுக்கொள்கிறோம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In