
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையொட்டி, அக்கட்சியின் தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் கொடியேற்றி, கட்சியின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலையை திறந்து வைத்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார் நடிகர் விஜய். அப்போதே 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு என நிர்ணயித்த அவர், அதற்கான அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனையடுத்து, விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றபின், கடந்த வெள்ளிக்கிழமையன்று துணைப் பொதுச்செயலாளர், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வையொட்டி அதிமுக IT பிரிவு தலைவரான திரு.CTR.நிர்மல் குமார் “இரண்டாம் ஆண்டு தொடக்கம்” என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் தற்போது அதிமுகவில் உள்ளார், இதற்க்கு முன்பு இவர் பாஜகவில் இருந்து வந்து அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்தி பூக்கொத்து கொடுத்தது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது.


🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🌺