விருதுநகர் அருகே போலீசார் மீது சரமாரியாக சரமாரியாக தா ஒரு கும்பல் ஒன்று தாக்கிய சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் டாஸ்மார்க் அருகே உள்ள பாரில், போலீசாரை சரமாரியாக ஒரு கும்பல் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
புகார் தொடர்பாக வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றபோது, குடிபோதையில் இருந்த அந்த கும்பல் காவலர்களை அடித்து உதைத்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மற்றும் அந்த கும்பலை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கிய நிலையில், போலீசாரை தாக்கிய கீழ பால்பாண்டி (வயது 31), கிளிராஜன் (வயது 24), பாஞ்சாலி ராஜா (வயது 40), பாண்டியராஜ் (வயது 22), சரவணகார்த்திக் (வயது 33), முத்துராஜ் (வயது 34) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


காவலர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல வழிமுறைகள் உள்ளன. அதை விட்டுவிட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல