Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நயன்தாரா, திரிஷா பின்னாடி சுற்றித்திரிந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? விளாசிய செல்லூர் ராஜூ..!!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
September 21, 2024
in Default
1
நயன்தாரா, திரிஷா பின்னாடி சுற்றித்திரிந்தவருக்கு  துணை முதல்வர் பதவியா? விளாசிய செல்லூர் ராஜூ..!!
45
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நேற்று வரை நயன்தாரா, திரிஷா பின்னாடி இருந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக உதயநிதி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்றும் திமுகவுக்கு பொருந்துதோ இல்லையோ, அதிமுகவிற்கு பொருந்தும் என்று தெரிவித்தார். 

அண்ணாவின் கட்சியை, கொடியை, சின்னத்தை இன்றைக்கு உலகறிய செய்தவர் எம்.ஜி.ஆர் தான் என்ற செல்லூர் ராஜூ, அப்பேற்பட்டவரை கருணாநிதி கட்சியை விட்டு தூக்கி எரிந்தார் என்றும் கூறினார்.  திமுக இருக்கும் வரை அண்ணாவின் பெயரை மறைத்து விடும் என்பதால், எம்ஜிஆர் இந்த கட்சிக்கு அண்ணா திமுக என பெயர் வைத்தார் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

திமுகவில் இன்றைக்கு வாரிசு அரசியல் தான் உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அப்படியா இருந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.  விலைவாசி உயர்வு, மின் கட்டணம் 3 முறை உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, இவையெல்லாம் செய்து விட்டு தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்று செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார். 

பிறந்தால் கலைஞர் மகனாக பிறக்க வேண்டும் என்றும் அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் நடிகைகளுடன் ஆடி பாடி இன்றைக்கு எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பதிலே வாக்கு கம்மியாக உள்ள தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி வெற்றிபெற்றார் என்றும் சட்டமன்றத்தில் அவருக்கு முன் சீட்டு, ஆனால், எனக்கும் ராஜன் செல்லப்பாவுக்கும் கடைசி சீட்டு வழங்கியுள்ளார்கள் என்றும் கூறினார்.

நேற்று வரை நயன்தாரா, திரிஷா பின்னாடி இருந்தவருக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார்.

Previous Post

மழைநீர் வடிகால் டெண்டர் ஒதுக்கீடு ஊழல்: வேலுமணி மீது வழக்கு…எடப்பாடி காட்டம்!

Next Post

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் மோசடி: பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளைக் கண்காணிக்க குழு’ – தமிழக அரசு உத்தரவு!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் மோசடி: பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளைக் கண்காணிக்க குழு’ – தமிழக அரசு உத்தரவு!

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் மோசடி: பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளைக் கண்காணிக்க குழு’ - தமிழக அரசு உத்தரவு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ஒரு பொண்ண ஏமாத்தி கர்ப்பம் ஆக்கி பிள்ளை பெற்ற ஜெயக்குமாருக்கு மீன்வளத்துறை அமைச்சர் என்ற பதவியை கொடுக்கும்போது நீங்கள் எங்கு சென்று இருந்தீர்கள் ஏன் எதுவும் பேசவில்லை. எனவே உதயநிதியை பற்றி பேசும் அருகதை இந்த தெர்மாகோல் ராஜுக்கு இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In