கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் வைகை நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள அரசு நிலத்தில் முட்புதர்களை உடனடியாக அகற்றி அந்த அரசு நிலத்தை பள்ளியின் விரிவாக்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த இடத்தில் இது அரசுக்கு சொந்தமான நிலம் என சர்வே என்னுடன் பெயர் பலகை வைத்திட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 4-7- 2024 வியாழக்கிழமை அன்று குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்க பட்டது
அந்தப் போராட்ட அறிவிப்பின் காரணமாக 2 -7 -2024 அன்று குளித்தலை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது அந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில்
குளித்தலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக இரண்டு நாட்களுக்குள் முட்புதர்களை அகற்றி சுத்தப்படுத்தி அந்த நிலத்தில் இது அரசுக்கு சொந்தமான நிலம் என்று பெயர் பலகை வைப்பது என சுமூக முடிவு எடுக்கப்பட்டது அதன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது
அந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாக எந்தவித பணியும் செய்யாமல் தனிநபரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்
இன்று 29-7-2024 மதியம் 11 மணிக்கு பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை ஏன் அமல்படுத்தவில்லை என்று ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்க வந்த காங்கிரஸ் கட்சியின் குளித்தலை வட்டார தலைவர் சித. ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் இரா. முத்துச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இ பி. காமராஜ் ஆகியோரை அவமரியாதை செய்தும் எந்தவித பதிலையும் சொல்லாமல் அலட்சியப்படுத்திய ஜோனல் அலுவலர் சகுந்தலா அவர்களை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பின்பு நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் முற்பூதர்களை அகற்றும் பொழுது முட்புதர்களை அகற்றக்கூடாது என்று மிரட்டுகின்ற தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கடிதம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
வருகின்ற 9- 8 -2024 அன்று அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள முட்புதர்களை அகற்றுவதற்கு குளித்தலை காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்து 9 தேதி அன்று முட்புதர்கள் அகற்ற அகற்றப்படும் குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததின் பேரில் மீண்டும் போராட்டத்தை ஒத்தி வைத்தோம்
அதேபோல் 9-8-2024 இன்று குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள், குளித்தலை வருவாய் வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர்,மற்றும் காவல் துறை பாதுகாப்புடன் இன்று அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள முட்புதர்களை அகற்றப்பட்டது

கமெண்ட் செய்ய விரும்பவில்லை