Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி காலம் ஜூலை 28இல் முடிவடைவு.. அடுத்தது என்ன?

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 15, 2024
in Default
1
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி காலம் ஜூலை 28இல் முடிவடைவு.. அடுத்தது என்ன?
23
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி காலம் கடந்த மாதம் 28ந்தேதியோடு முடிவடைந்ததையடுத்து அந்த பதவியிலிருந்து குஷ்பூ விலகினார்.

அவர் பேசுகையில் ” தேசிய மகளிர் ஆணையத்திலிருந்ததால், கட்சி வேலைகளில் முழுவதுமாக ஈடுபட முடியவில்லை.  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு நான் கமலாலயத்துக்கு வரவில்லை. ஒன்றரை வருடம் கழித்து தான் வந்திருக்கிறேன். கட்சி சார்பாக, பாஜக காரியகர்த்தாவாக வேலை செய்ய வேண்டும் என்று ஆசை. என்னக்கு இந்த பொறுப்பு கொடுத்த பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு நன்றி.

நான் எப்போதும் ஒரு பேரம் பேசிவிட்டு வாழ்க்கையில் நடப்பது கிடையாது.  இந்த பொறுப்பில் இருந்ததால் கட்சியை ஆதரித்து  கூட என்னால் பேச முடியவில்லை. ஆனால் இப்போது முழுவேலையாக கட்சி பணியில் இறங்கவுள்ளேன்.

ராஜினாமா செய்யச் சொல்லி எனக்கு எந்த வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. கட்சியை நம்பி, பிரதமர் மோடியை நம்பி பாஜகவில் இருக்கிறோம்.” என்றார்.

மேலும் அவர் ” கடந்த 10 ஆண்டுகளில் பாரத தேசம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்று நாம் பார்க்கலாம். இன்று கூட 2047-இல் நம் நாடு உலகின் மிகப் பெரிய மக்களாட்சியாக மாறுவதற்கும், மிகவும் சக்தி வாய்ந்த நாடாக மாறுவதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோதி  பேசியுள்ளார். நாட்டின் முன்னேற்றம்தான் முக்கியம், தனிப்பட்ட முன்னேற்றம் முக்கியமில்லை. நாடு முன்னேறினால்தான் நாமும் முன்னேற முடியும்” என்றார்.

அப்போது செய்தியாளர்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு,  “ஆரம்பித்துவிட்டீர்களா… அடுத்தது என்ன நடக்க போகிறது என எனக்கே தெரியவில்லை.

நான் 6, 7 மாதங்களுக்கு முன்பே  ராஜினாமா பற்றி பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பி.எல். சந்தோஷ் ஆகியோரிடம் பேச ஆரம்பித்துவிட்டேன்.

ஜூலை மாதமே நான் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டேன். நேற்றுதான் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்றார் குஷ்பு.

Previous Post

Kolkata doctor murder case: 'மேற்கு வங்க அரசே பொறுப்பு…': அந்த மாநில கவர்னர் கடும் விமர்சனம்

Next Post

சுனிதாவின் அரசியல் பயணம் விரைவில் முடிவுக்கு வரும்: சிசோடியா

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
சுனிதாவின் அரசியல் பயணம் விரைவில் முடிவுக்கு வரும்: சிசோடியா

சுனிதாவின் அரசியல் பயணம் விரைவில் முடிவுக்கு வரும்: சிசோடியா

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😜😜😜🤣

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In