Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நானா படேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் நீதிமன்றம் தீர்ப்பு.. என்னம்மா இப்டி பண்றீங்களேமா..?

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
March 9, 2025
in Default
0
நானா படேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் நீதிமன்றம் தீர்ப்பு.. என்னம்மா இப்டி பண்றீங்களேமா..?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நானா படேகர் மீது நடிகை அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மும்பை நீதிமன்றம் மறுத்துள்ளது.

பிரபல இந்தி நடிகர் நானா படேகர். இவர் தமிழில் ’பொம்மலாட்டம்’, ’காலா’ படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். ‘2008-ஆம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது, நானா படேகர் மற்றும் மூன்று பேர் தனக்குப் பாலியல் தொல்லை தந்தனர் என்று மும்பை ஒசிவாரா காவல்நிலையத்தில் 2018 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், நானே படேகரின் வாக்குமூலம் உட்பட பலரது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். பின்னர், 2019 ஆம் ஆண்டு மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ‘பி ரிப்போர்ட்’ என்னும் அறிக்கையை செய்தனர். அதன்படி, நானா படேகருக்கு எதிரான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்றும் இந்த FIR பொய்யானது என்றும் தெரிவித்திருந்தனர். மேலும், நானா படேகர் மீதான வழக்கை தொடர்ந்து நடந்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, பி – ரிப்போர்ட்டை எதிர்த்து வேறொரு மனுவைத் தாக்கல் செய்த தனுஸ்ரீ, தனது புகாரில் மேலும் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கு அந்தேரியில் உள்ள ரயில்வே நீதிமன்றத்தின் முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் என்.வி. பன்சால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.


இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், “மார்ச் 23, 2008 அன்று நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 354 மற்றும் 509 இன் கீழ் தத்தா 2018 இல் ஒரு FIR பதிவு செய்துள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) விதிகளின்படி இந்தக் குற்றம் தொடர்பாக புகாரளிக்க மூன்று ஆண்டுகள் மட்டுமே வரம்பு உள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடு முடிந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது நீண்ட காலத்திற்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு எனக்கு முன் எந்த உதாரணமும் இல்லை. நீதிமன்றத்தால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குத் தடை உள்ளது.

குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான விரைவான விசாரணைகள் மற்றும் தண்டனைகளை உறுதி செய்ய சட்டங்களின் மூலம் அழுத்தம் கொடுப்பதுதான் வரம்புக் காலத்தை நிர்ணயிப்பதற்கான நோக்கம்” எனத் தெரிவித்தார்.

“புகாரை முன்வைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணத்தை விளக்க எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. நியாயமான காரணமின்றி இவ்வளவு காலதாமதத்தை அனுமதிப்பது, சட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும்” என்றும் நீதிபதி கவலை தெரிவித்தார்… குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவம் உண்மையென்றோ பொய் என்றோ உறுதியாகக் கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான சட்டத்தடை காரணமாக வழக்கை விசாரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் இதுபோன்ற முடிவுகள், பல ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் குற்றங்களுக்கு எதிராக நீதிதேடும் பெண்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Previous Post

“இழந்த சக்தியை மீண்டும் பெற” – சசிகலா வழிபாடு..

Next Post

தொகுதிகள் குறைக்காவிட்டாலும் தென் மாநிலங்களுக்கு பாதிப்புதான்: ப.சிதம்பரம் கவலை

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
தொகுதிகள் குறைக்காவிட்டாலும் தென் மாநிலங்களுக்கு பாதிப்புதான்: ப.சிதம்பரம் கவலை

தொகுதிகள் குறைக்காவிட்டாலும் தென் மாநிலங்களுக்கு பாதிப்புதான்: ப.சிதம்பரம் கவலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In