Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2.5 லட்சம் பேருக்கு உணவளித்த நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பு..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
November 16, 2024
in Default
1
அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2.5 லட்சம் பேருக்கு உணவளித்த நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பு..
43
SHARES
70
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் ஸ்டார்குரு அவர்கள் தலைமையில் ஏராளமான சமூக சேவைகளை தினந்தோறும் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியிருந்து கவனித்து வரும் காப்பாளர்கள் தினமும் ஆயிரம் பேருக்கு விலையில்லா உணவு, குடிநீர், மற்றும் பழ வகைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இதனால் இதுவரை இரண்டரை லட்சம் பேர்கள் பயனடைந்து உள்ளனர். நேற்று நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் ஸ்டார்குரு தலைமையில் நடந்த இருநூற்று ஐம்பதாவது நாள் விழாவில் 2000 க்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா உணவு, குடிநீர், பழ வகைகள் வழங்கும் நிகழ்வை மதுரை மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி ஜஸ்டின்பிரபாகரன் துவக்கி வைத்தார். சட்ட ஆலோசகர். வக்கீல். முத்துக்குமார் உட்பட நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் ஸ்டார்குரு கூறும் பொழுது:- எங்கள் நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பில் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் ஓய்வு பெற்ற அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் தங்களது வேலை நேரங்கள் போக எஞ்சியுள்ள நேரத்தை பொது சேவைகள் செய்வதற்கு ஒதுக்கி வருகின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் ஆயிரம் பேர் வீதம் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா உணவு, குடிநீர், பழ வகைகளை வழங்கியுள்ளோம். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் சீருடைகள் வழங்கியுள்ளோம். அடிப்படை வசதிகள் கிடைக்க பெறாத பள்ளிகளுக்கு சொந்த செலவில் அடிப்படை வசதிகள் செய்து தருகிறோம். மாற்று திறனாளிகளுக்கு தேவையான விலையில்லா உபகரணங்கள், விலையில்லா சக்கர நாற்காலிகளை வழங்கி உள்ளோம். பெண்களுக்கான சுய தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட விலையில்லா நவீன தையல் மிஷின்கள் வழங்கியும், சாலையோர ஆதரவற்றவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய முதலுதவி அளித்து பராமரித்து அவர்களது உறவினர்களிடம் சேர்த்து வைக்கும் பணியையும், வைகை ஆற்றின் தூய்மை செய்தல், ஆற்றினுள் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அடர்ந்து படர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி அப்புற படுத்தி வருகிறோம். ஆற்றின் இரு கரையோரங்களிலும் இருநூறுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஆற்றினுள் கழிவுகளை கொட்டுவதை கண்காணித்து ஆறு அசுத்தமாவதை தடுத்து நிறுத்துதல் போன்ற சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.

இனி வரும் காலங்களில் வைகை ஆற்று பாலத்தின் பக்கவாட்டு சுவர்களிலும், பாலத்திற்கு அடியிலும் போஸ்டர்கள் மற்றும் பிளக்கஸ் ஓட்டுவதை தடுத்து நிறுத்தி பாலத்தின் ஸ்திரத் தன்மையை காப்பதற்காக பாலத்தின் தமிழ் பாரம்பரியம் மிக்க வண்ண ஓவியங்களை வரைய உள்ளோம். மேலும் கோடை காலத்தை சமாளிப்பதற்காக முதல் கட்டமாக மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நிழற் குடைகளை வழங்க உள்ளோம். மேலும் பசியால் வாடும் ஒரு கோடி பேருக்கு உணவு அளிப்பது என்கள் இலக்கு என்று அவர் கூறினார்.

Previous Post

சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா..

Next Post

திருவள்ளூரில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! பணி நியமன ஆணைகள் வழங்கிய அமைச்சர்..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
திருவள்ளூரில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! பணி நியமன ஆணைகள் வழங்கிய அமைச்சர்..

திருவள்ளூரில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! பணி நியமன ஆணைகள் வழங்கிய அமைச்சர்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    நல்ல செயல் வரவேற்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In