தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் நிறுவனமும், மார்ட்டின் குழுமமும் இணைந்து ‘மிஷன் ரூமி 2024’ என்ற பெயரில், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்கியுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட்டான ரூமி 1 மூன்று சோதனை செயற்கைக் கோள்களுடன் ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 7 மணியளவில் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தை கடற்கரையில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது .மொபைல் லாஞ்சரைப் பயன்படுத்தி இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரம் வரை பறக்கக்கூடிய திறன் கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் .
சிஎஸ்ஆர் எனப்படும் அரசுடன் சேர்ந்து தனியார் நிறுவனங்கள் பங்களிக்கும் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த ராக்கெட். இந்த திட்டத்தில் லாட்டரி கிங் மார்ட்டின் குழுமம் 8 கோடி முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகை ராக்கெட்டுகளின் பல பாகங்கள் மீண்டும் பயன்படுத்த கூடிய வகையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளன. ராக்கெட்டின் மூக்கு பகுதி மட்டுமே மீண்டும் தயாரிக்கப்படும். ஏனென்றால், செயற்கை கோள்களை நிலைநிறுத்தும் போது, ராக்கெட்டின் மூக்கு பகுதி கழன்று விழுந்து விடும்.
இந்த ராக்கெட்டில் கார்பைன்டை ஆக்சைடு கொண்டு இயங்கும் நவீன பாராசூட் உள்ளது. இதனால், பத்திரமாக மீண்டும் தரையிறங்கி விடும். அதோடு, ராக்கெட்டின் பாகங்கள் எந்த சேதமும் இல்லாமல் தரை இறங்குமளவுக்கு இந்த பாராசூட்டுக்கு திறன் உண்டு. இதனால், கழன்று விழுந்த மூக்கு பகுதியை மட்டும் பொருத்தி மீண்டும் ராக்கெட்டை ஏவலாம்.


கமெண்ட் செய்ய விரும்பவில்லை