Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து: 7 பேர் பலி…

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
February 2, 2025
in Default
1
அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து: 7 பேர் பலி…
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உயிர் காக்கும் சிகிச்சைக்காக பறந்து சென்ற விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள வடக்குபிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து குழந்தை ஒன்றின் சிகிச்சைக்காக மெக்சிகோவின் டிஜுவானா நகர் நோக்கி ஜெட் விமானம் புறப்பட்டது.

விமானத்தில் மெக்சிகோவைச் சேர்ந்த குழந்தை, குழந்தையின் தாயார், விமானிகள் இருவர், ஒரு மருத்துவர் மற்றும் ஓர் உதவியாளர் என 6 பேர் பயணித்தனர்.

ஆயிரத்து 500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், நகர்ப்பகுதியில் விழுந்து சிதறியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேருடன், விமானம் விழுந்த இடத்தில் காருக்குள் இருந்த ஒருவரும் உயிரிழந்தார். மேலும், அந்த இடத்தில் இருந்த 19 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita நகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, விர்ஜினியாவிலுள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்துக்கு அருகே ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த சிலநாட்களிலேயே மேலும் ஒரு விமான விபத்து ஏற்பட்டது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

ஈரோட்டில் பெரும் பரபரப்பு! நாதக – பெரியார் கட்சியினர் மோதல்! 

Next Post

Budget 25: Insurance துறையில் 100% அந்நிய முதலீடு; இந்திய நிறுவனங்களைப் பாதிக்குமா?| IPS | EPI – 128

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
Budget 25: Insurance துறையில் 100% அந்நிய முதலீடு; இந்திய நிறுவனங்களைப் பாதிக்குமா?| IPS | EPI – 128

Budget 25: Insurance துறையில் 100% அந்நிய முதலீடு; இந்திய நிறுவனங்களைப் பாதிக்குமா?| IPS | EPI - 128

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In