Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நீங்கள் விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? ராகுல் வேதனை..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 12, 2024
in Default
1
நீங்கள் விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? ராகுல் வேதனை..
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மைசூரில் இருந்து சென்னை வழியே பீஹார் செல்லும் தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயிலானது,  நேற்று இரவு பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஏழு முப்பது மணி அளவில் புறப்பட்டு பீகார் நோக்கி சென்று கொண்டிருந்தது.


 22 பெட்டிகளைக் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் சுமார் 1300க்கும் மேற்பட்ட பயணிகளும், முன்பதிவு இல்லாத இரண்டு பெட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் என 1500க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 

சரக்கு ரயிலை மோதிய பயணிகள் ரயில்: 


 
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து கவரைப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே சென்ற போது, தடம் மாறி முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. 


பிரதான தண்டவாளத்தை தவிர்த்து அருகில் இருக்கக்கூடிய லூப்லைன் எனும் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்பக்கத்தில் மோதியதால், இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த இன்ஜின் மற்றும் 13 பெட்டிகள் தடம் புரண்டது. இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் சரக்குகளை ஏற்றிச் செல்லும் முதல் பெட்டி தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. 
விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
இந்த விபத்தில் எந்தவித உயிர் இழப்புகளும் ஏற்படவில்லை என இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் ரயிலில் பயணித்த ஒருவர் கால் எலும்பு முறிவு மற்றும் இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

 விசாரணை:

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மீண்டும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார். மேலும், விபத்து தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்தப்படும் எனவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார். 

ராகுல் காந்தி கண்டனம்: 


 
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ,மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

அவர் தெரிவித்ததாவது “ 
 
 
இதுபோன்ற விபத்தானது பலமுறை நிகழ்ந்துள்ளது, பல உயிரிழப்புகள் ஏற்பட்ட போதிலும், மத்திய அரசானது பாடம் கற்றுக் கொள்ளவில்லை. இந்த அரசு விழித்துக் கொள்ள, இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? என கடுமையாக விமர்சித்துள்ளார்.

The Mysuru-Darbhanga train accident mirrors the horrific Balasore accident—a passenger train colliding with a stationary goods train.

Despite many lives lost in numerous accidents, no lessons are learned. Accountability starts at the top. How many more families must be… https://t.co/ggCGlgCXOE

— Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2024

 
 
கடந்த ஜூன் மாதம் 2-ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Previous Post

“காட்சிகளை நீக்காவிட்டால் போராட வேண்டிய சூழல் வரும்” – மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்..

Next Post

சீமானுக்கு போட்டியாக உருவாகிறது தனிக்கட்சி..? ஒன்று கூடும் எதிர் கோஷ்டி! நவம்பர் 27 அன்று புதிய பூகம்பம்..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
சீமானுக்கு போட்டியாக உருவாகிறது தனிக்கட்சி..? ஒன்று கூடும் எதிர் கோஷ்டி! நவம்பர் 27 அன்று புதிய பூகம்பம்..

சீமானுக்கு போட்டியாக உருவாகிறது தனிக்கட்சி..? ஒன்று கூடும் எதிர் கோஷ்டி! நவம்பர் 27 அன்று புதிய பூகம்பம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இந்த ராகுல் காந்தி நடைபயணம் என்கிற பெயரில் அழகிய இளம் பெண்களின் கையைப் பிடித்துக் கொண்டு வளம் வருவார் பின்னர் பத்திரிகை பேட்டி என்கிற பெயரில் எதையாவது உளறிக் கொண்டிருப்பவர். நாட்டு மக்களுக்காக எங்க ஒரு நல்ல செயலையும் செய்ததில்லை. கட்சியிலும் சரி தனிப்பட்ட முறையிலும் சரி கையில் பணம் இருக்கிறது தங்களது கட்சியில் மூத்த வழக்கறிஞர்களும் உள்ளனர். வழக்கறிஞர்கள் உதவியுடன் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் பொது நலனுக்காக வழக்கு தொடுக்கலாமே.எந்த கட்சியினரும் இதுபோன்ற பொது நலன் வழக்குகளை தொடுப்பதில்லை.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In