கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் திமுக தெற்கு ஒன்றியம் கோமாலூர் கிராம ஊராட்சியில் திமுக நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்த கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் கோமாலூரில இன்று 15/02/2025 நடந்தது. இதில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க இயக்குனரும் ஒன்றிய பொருளாளர் சி காமராஜ் தலைமை தாங்கினார். கோமாலூர் திமுக கிளை நிர்வாகிகள் ஆர் பாலகிருஷ்ணன் டி ராஜேந்திரன் ஆர். ராஜு எஸ் சுப்பிரமணியன் வை செல்வராஜ் வை தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோமாலூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். மாதுரி தேவி சிவக்குமார் அனைவரும் வரவேற்றார்.
இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் பெருநற்கிள்ளி துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், பெருநற்கிள்ளி துணைப் பொதுச் செயலாளர் பேசுகையில்; 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலை சரி பார்த்தல், புதிய வாக்காளர்களை சேர்த்தல், விடுபட்ட வாக்காளர்களை சேர்த்தல், இறந்த வாக்காளர்களை நீக்க வேண்டும் உள்ளிட்ட பணிகளை செய்து முடிக்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் வசந்தம் க கார்த்திகேயனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அயராது உழைக்க வேண்டும். பாஜக மோடி அரசையும் பெரியாரை இழிவு படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமானையும் அதிமுகவையும் சரமாரியாக சாடினார்.
மேலும், இந்த தொகுதியில் உள்ள குறைகளை தெரியப்படுத்துங்கள், அந்த குறைகளை தொகுதி பார்வையாளர் இசை பதிவு செய்து தலைமைக்கு தெரியப்படுத்தி விரைவாக செய்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்’ என்றார். இக்கூட்டத்தில் திருக்கோவிலூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் எம் ஆர் ராஜேந்திரன் ஒன்றிய துணை செயலாளர் ஜி தணிகாசலம் மாவட்ட கவுன்சிலர் எஸ் ஜெயசங்கர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினோத் ஏகாம்பரம் எஸ் சிவக்குமார் தொமுச மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ உதயா மாவட்ட இளைஞரணி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




