டெல்லி: டெல்லியில் உள்ள ‘பொதிகை’ (Podhigai – Tamil Nadu House) தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மிரட்டல் தகவல் வந்தவுடனே, அங்கு தங்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஐ.ஏ.என்.எஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், காவல்துறையினரும் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாடு இல்லத்தில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


😄😄😄😄😄😄😄😄😄😄