Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நடிகர் விஜய்க்கு சிக்கல்! தவெக கொடியில் யானை சின்னம்…நோட்டீஸ் அனுப்பிய பகுஜன் சமாஜ் கட்சி

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 19, 2024 - Updated on October 20, 2024
in Default
1
நடிகர் விஜய்க்கு சிக்கல்! தவெக கொடியில் யானை சின்னம்…நோட்டீஸ் அனுப்பிய பகுஜன் சமாஜ் கட்சி
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தவெக கட்சிக் கொடியில் உள்ள யானை சின்னம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை விஜய் அறிமுகப்படுத்தி இருந்தார். அதில் 2 போர் யானைகள் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல் வாகை மலரும் இடம் பெற்றிருந்தது.

இதற்கிடையே தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு, வழக்கும் தொடுக்கப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி தொடர்பாக பகுஜன் சமாஜ் புகார் அளித்திருந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கு பதில் அளித்து இருந்தது. அதில்”இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் தற்காலிக சின்னம் (Free symbol list) கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பு தான் ஒரு கட்சி விண்ணபித்து சின்னத்தை பெற முடியும். எனவே ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை. கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. ஒரு கட்சிக்கு கொடி இருக்கிறது என்றால் அந்த கட்சி தான் பொறுப்பு. மற்ற கட்சிகளின் சின்னத்தை விதிமீறாமல் கொடி இருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கூறி இருந்தார்.


இந்த நிலையில் தவெக கட்சி தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்க கோரி உள்ளார். கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தவெக கட்சி கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. இதனால் தற்போது சட்டபோராட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தயாராகி வருகிறது.

Previous Post

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

Next Post

எந்த மத சடங்குகளாலும் குழந்தைத் திருமண தடை சட்டத்தை மீற முடியாது.. உச்ச நீதிமன்றம்

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
எந்த மத சடங்குகளாலும் குழந்தைத் திருமண தடை சட்டத்தை மீற முடியாது.. உச்ச நீதிமன்றம்

எந்த மத சடங்குகளாலும் குழந்தைத் திருமண தடை சட்டத்தை மீற முடியாது.. உச்ச நீதிமன்றம்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In