Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

100 நாள் வேலை பணியாளர்களின் ஆதார் நகலை வைத்து மோசடி: பாஜக நிர்வாகி மீது புகார்..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
February 15, 2025
in Default
0
100 நாள் வேலை பணியாளர்களின் ஆதார் நகலை வைத்து மோசடி: பாஜக நிர்வாகி மீது புகார்..
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களின் ஆதார் நகலை வைத்து பாஜ பெண் நிர்வாகி ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக டிஎஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டையை சேர்ந்த பெண்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இதே கிராமத்தை சேர்ந்த பாஜ மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சிவசக்தி என்பவர், நூறு நாள் வேலை திட்ட பணி மேற்பார்வையாளராக இருந்துள்ளார். தற்போது அந்த பணியில் இல்லை. இந்நிலையில் நூறு நாள் வேலை திட்ட பணியில் இருந்தபோது வேலை செய்த பெண்களின் ஆதார் உள்ளிட்ட நகல்கள் சிவசக்தியிடம் இருந்துள்ளது.

அந்த நகல்களில் போலியான பெண்களின் புகைப்படத்தை ஒட்டி அதை நகலெடுத்து தனியார் நிதி நிறுவனங்களில் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடன்பெற தனது புகைப்படத்தை அளிக்கும் பெண்களுக்கு கமிஷன் தொகையை சிவசக்தி கொடுத்துள்ளார். நாளடைவில் கடனை அடைக்காததால், ஆதார் தகவல்களில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் பெயரில் லோன் எடுத்ததாக வீட்டிற்கு நோட்டீஸ் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாச்சியார்பேட்டை கிராம பெண்கள், ‘தாங்கள் எந்த கடனும் வாங்கவில்லை’ என்று கூறியுள்ளனர்.

ஆனால், நிதி நிறுவனங்கள், அந்த குறிப்பிட்ட பெண்களின் ஆதார் உள்ளிட்ட தகவல்களை கொடுத்து கடன் பெற்றதை உறுதி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியான பெண்கள், சிவசக்தியிடம் கேட்டுள்ளனர். அவர் சரியாக பதில் அளிக்காததால், நேற்று 10க்கும் மேற்பட்ட பெண்கள் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீபை சந்தித்து, சிவசக்தி மீது புகார் அளித்தனர். புகாரை பெற்ற டிஎஸ்பி, உரிய விசாரணை செய்யப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.

இதேபோல் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாகவும் சிவசக்தி கடன்களை பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருவது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பணம் வழங்கியதாக கூறப்பட்ட தனியார் நிதி நிறுவனங்களின் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post

“பிரபாகரன் புகைப்படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” – நீதிமன்றத்தில் மனு..

Next Post

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ரயிலில் சென்ற தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் மீது வட மாநிலத்தவர்கள் தாக்குதல்..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ரயிலில் சென்ற தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் மீது வட மாநிலத்தவர்கள் தாக்குதல்..

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ரயிலில் சென்ற தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் மீது வட மாநிலத்தவர்கள் தாக்குதல்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In