இவரின் மகன்களில் ஒருவரான இஸ்மாயில் வழி வந்தவர்கள் இஸ்லாமியர்கள் எனவும், மற்றொரு மகனான யாக்கோபு வழிவந்தவர்கள் யூதர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இதிலிருந்து இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு இருப்பது உறுதியாகி உள்ளது.
எனவேதான் இஸ்லாமியர்களை நான் “சித்தப்பா’ என அழைப்பேன். அவர்கள் என்னை ‘மகன்’ என அழைப்பார்கள். இஸ்லாமியர்கள் பிரதிபலன் பார்க்காமல் தி.மு.க.வுக்கு வாக்களித்தார்கள். தி.மு.க. இஸ்லாமியர்களுக்கு ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை. இஸ்லாமியர்களை தி.மு.க. வாக்களிக்கும் இயந்திரமாக பயன்படுத்தியது.

இஸ்லாமிய பள்ளி வாசல்களுக்கு காவல்துறையை அனுப்பி சோதனை செய்த வரலாறு தி.மு.க.ஆட்சியில் உண்டு. இஸ்லாமிய இளைஞர்கள் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டார்கள். எஸ்.டி.பி.ஐ.கட்சியில் வீரமிக்க இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆகவே இந்த கட்சியை முடக்க தி.மு.க. முயற்சி செய்கிறது.
இஸ்லாத்தைப் பகைத்தவர்கள் ஆண்டதாக வரலாறு கிடையாது. இஸ்லாமியர்களை நம்பியவர்கள் கெட்டதாக வரலாறு கிடையாது. அ.தி.மு.க. அவர்களை நம்பி இருக்கிறோம். ஆனால் தி.மு.க. அவர்களை வம்புக்கு இழுக்கிறது” என பேசினார்.
