Last Updated:
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து டி-ஷர்ட் அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள் 10 பேரை இடைநீக்கம் செய்வது குறித்து மாநிலங்களவை செயலகம் முடிவு செய்ய உள்ளது.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ‘டி-ஷர்ட்’ அணிந்து கொண்டு அவைக்கு வந்த திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் 10 பேரை இடைநீக்கம் செய்வது குறித்து மாநிலங்களவை செயலகம் இன்று முடிவெடுக்க உள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ’FairDelimitation’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி- ஷர்ட்டை அணிந்து வந்தனர். மேலும் அதில், தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் எனும் வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அதே டி ஷர்ட்டுடன் அவர்கள் அவைக்குச் சென்றனர். இந்த விவகாரத்தால் மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், மாநிலங்களவை அவை குறிப்பில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, சண்முகம், வில்சன், கிரிராஜன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு உள்ளிட்ட 10 எம்.பிக்கள் நாடாளுமன்ற விதிகளுக்கு எதிராக டி-ஷர்ட் அணிந்து வந்து அவை மரபை மீறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 10 எம்.பி.க்களையும் இடைநீக்கம் செய்வது குறித்து இன்று காலை முடிவு செய்யப்படும் மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
Delhi,Delhi,Delhi
March 21, 2025 6:47 AM IST

