கடந்த வாரம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவர் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. இதனால், தீயணைப்பு துறையின் உதவியை நாடியுள்ளது அவரது குடும்பம்.
தீயணைப்பு முடித்ததும், தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டில் கட்டு கட்டான பணத்தை கண்டுள்ளனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிகப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேச கூடிய இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கூட்டத்தில், “யஷ்வந்த் வர்மா முன்பு வேலை பார்த்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே, அவரை மீண்டும் பணி மாறுதல் செய்வதற்கும், அவர் மீது விசாரணை நடத்திடவும்’ முடிவு செய்யப்பட்டது.

சம்பவம் குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய்யிடன் நீதிபதி யஷ்வந்த் வர்மா கொடுத்த விளக்கக் கடிதத்தில், “பணம் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட அறை அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு அறை ஆகும். பயன்படுத்தாத நாற்காலிகள், பாட்டில்கள், பாத்திரங்கள், தோட்டக் கருவிகள் ஆகியவற்றை போட்டு வைக்கும் அறை ஆகும்.
அது ஒரு பூட்டப்படாத அறை. அந்த அறைக்கு முன்பக்க கதவு மூலமும், பணியாளர்கள் குடியிருப்பிற்கு பின் இருந்தும் வந்துப்போக முடியும். அதனால், இது என்னுடைய வீட்டின் அறை என்று கூறப்பட்டது போல இல்லை.
